Tvk Vijay protest: இன்று இரவிற்குள் வெளியிடுங்கள்.. இல்லையென்றால்.. தமிழக அரசுக்கு கெடு விதித்த ஆதவ் அர்ஜுனா

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெய்பீம் படத்தை பார்த்து அழுத முதல்வர் ஸ்டாலின் எனக்கு 3 நாட்கள் தூக்கம் வரவில்லை என்று சொன்னார். உண்மைய பார்த்து உங்களுக்கு கண்ணீர் வராது. அஜித் குமார் மாதிரி 31 அப்பாவிகளின் மரணங்களும் மறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த 31 நிரபராதிகளுக்கும் நீதி வேண்டும். உள்துறை அமைச்சராக இருக்க கூடிய ஸ்டாலின் 31 பேருக்கும் நீதியை சொல்ல வேண்டும். இதற்கு விடை கிடைக்காவிட்டால் எங்க தலைவர் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவார் என்று ஆதவ் அர்ஜுனா பேசினார்.

சிவகங்கை திருப்புவனத்தில் திருட்டு புகார் ஒன்றில் கைது செய்யப்பட்ட அஜித் குமார் என்ற இளைஞர் விசாரணையின் போது போலீசார் அடித்து தாக்கியதில் உயிரிழந்தார். இது தொடர்பாக தற்போது சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ள நிலையில் காவல்துறை விசாரணையின் போது அஜித் குமார் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து விஜய் இன்று போராட்டத்தை அறிவித்தார்.

tvk-massive-protest-over-tamil-nadu-custodial-death-case-in-chennai-aadhav-arjuna-slams-cm-stalin

ஆதவ் அர்ஜுனா பேச்சு

அதன்படி இன்று காலையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காலை முதலே தவெக தொண்டர்கள் குவிந்தனர். அப்போது அவர்கள், சிஎம் சார் எங்களுக்கு சாரி வேண்டாம், நீதி வேண்டும் என்ற பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டனர். தொடர்ந்து போராட்டத்தில் தமிழக வெற்றிக் கழக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கூறியதாவது:-

இது வெறும் முதல்வரை கண்டித்து நடக்கக் கூடிய போராட்டம் கிடையாது. முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருக்கும் போது பெனிக்ஸ் ஜெயராஜ் லாக் அப் டெத்தில் முறைகேடு நடக்கும் போது கடுமையாக நீங்க போராடினீர்கள்.

நீங்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள்

அன்றைக்கு இருந்த முதல்வர் சிபிஐக்கு வழக்கை மாற்றிய போது தமிழக காவல்துறை என்ன செய்துகொண்டு இருந்தது? என்ன செய்துகொண்டு இருக்கிறது? என கேள்வி எழுப்பி முதல்வரை பதவி விலக சொல்கிறீர்கள்.. ஆனால் இன்று நீங்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள்.

எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது அன்றைக்கு இருந்த இந்த போராட்ட குணம் இப்போது எங்கே போனது.. முதலில் வலிப்பு ஏற்பட்டு தான் உயிரிழந்தார் என்று சொன்னாங்க.. ஆனால் நீதிமன்றம் தலையிட்ட பிறகு தான் அஜித் குமார் மரணம் லாக் அப் டெத் என்பது தெரிய வருகிறது.

31 அப்பாவிகளின் மரணங்களும்

அன்றைக்கு சிஐடி போட சொன்ன நீங்க இப்போ ஏன் போடவில்லை. அஜித் குமார் குடும்பத்தினரிடம் சாரி சொல்கிறீங்க.. ஏன் அரசியல் லாபத்துக்காக தானே இப்படி செய்றீங்க.. ஜெய்பீம் படத்தை பார்த்து அழுத முதல்வர் ஸ்டாலின் எனக்கு 3 நாட்கள் தூக்கம் வரவில்லை என்று சொன்னீர்கள்.

உண்மைய பார்த்து உங்களுக்கு கண்ணீர் வராது. படத்தை பார்த்து உங்களுக்கு கண்ணீர் வந்துள்ளது. 17 வயதில் லாக் அப் டெத்தில் ஒரு சிறுவன் கொல்லப்பட்டார். நீதிபதி சந்த்ரு கோகுல் ஸ்ரீ வழக்கில் ஒரு நபர் ஆணையம் அமைத்தீர்கள். ஆனால் அதன் அறிக்கை ஏன் வெளிவரவில்லை. இதை ஏன் மறைக்கிறீங்க.. அஜித் குமார் மாதிரி 31 அப்பாவிகளின் மரணங்களும் மறைக்கப்பட்டு இருக்கிறது.

மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவார்

இந்த குடும்பங்களின் தாய்மார்கள் கண்ணீருக்கு விடை வேண்டும். இந்த 31 பேர் நிரபராதிகளுக்கும் நீதி வேண்டும். அரசியல், தேர்தல் எல்லாத்தையும் ஓரமாக வைச்சுடுவோம்.. உள்துறை அமைச்சராக இருக்க கூடிய ஸ்டாலின் 31 பேருக்கும் நீதியை சொல்ல வேண்டும். இதற்கு விடை கிடைக்காவிட்டால் எங்க தலைவர் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவார்.

இது சாதாரண போராட்டம் என்று நினைத்துவிடாதீர்கள்.. 6 மணியோடு முடிந்துவிடும் என்று நினைக்காதீங்க.. நேற்று எல்லாருடைய கண்ணீரையும் பார்த்த பிறகு, அந்த தாயின் கண்ணீருக்கு கண்டிப்பாக நாம் நியாயம் கிடைக்க செய்ய வேண்டும் என்று எங்க தலைவர் சொன்னார். நீதிபதி சந்த்ரு அவர்களே நீங்களாவது அந்த அறிக்கையை வெளியிடுங்கள்.. இவ்வாறு அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+