Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தவெகவினர்தான் பொதுமக்களை அடிச்சிருக்காங்க! பாரிமுனையில் நடந்தது தெரியாம? சேகர் பாபு கோபம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெகவினரை திமுகவினர் தாக்கியதாக சொல்லப்படும் நிலையில், அமைச்சர் சேகர்பாபு இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அப்போது அவர் தவெகவினர் தான் பொதுமக்களை தாக்கியுள்ளனர் என்றும், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பொதுமக்களிடம் கேட்டால் எல்லா உண்மையும் தெரியும் என்று அவர் கூறியிருக்கிறார்.

சென்னை பாரிமுனையில் நேற்று தவெகவினர் சிலர் யாருக்கு வரும் தேர்தலில் ஓட்டு போடுவீர்கள் என்பது குறித்து சர்வே எடுக்க சென்றதாகவும், அப்போது திமுகவினர் அவர்களை சர்வே எடுக்க விடாமல் அடித்து தாக்கியதாகவும் தகவல்கள் பரவிய நிலையில் தவெகவினர் தான் பொதுமக்களை தாக்கியதாக அமைச்சர் சேகர்பாபு கூறியிருக்கிறார்.

sekarbabu

பாரிமுனையில் தவெக திமுக மோதல்

தவெகவை சேர்ந்த சிலர் நேற்று காலை சென்னை பாரீஸ் பகுதியில் விஜய்க்கு எந்த அளவுக்கு வரும் தேர்தலில் ஆதரவு இருக்கிறது, மக்கள் யாருக்கு ஓட்டு போட தயாராக உள்ளனர் என்பது குறித்து சர்வே எடுத்து வந்துள்ளனர். அப்போது அவர்கள் அங்குள்ள கடையில் ஜூஸ் குடித்துக் கொண்டிருந்தபோது திமுகவினர் வந்து சர்வே எடுக்க அனுமதி உள்ளதா என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது இந்த வாக்குவாதம் முற்றியதில் சுமார் 70 க்கும் மேற்பட்டோர் குவிந்து தவெகவினரை அடித்து அங்கிருந்து விரட்டியதாகவும், இதில் 4 மாத கர்ப்பிணி பெண் உள்பட 5க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் பரவின. இதற்கு தவெக தலைவர் விஜய், ஆஜவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

அமைச்சர் சேகர் பாபு விளக்கம்

தாக்குதலுக்கு உள்ளான பெண்களும் திமுகவினரே எங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், நள்ளிரவு 12 மணியளவில் ஸ்டாலின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாகவும் கூறினர். இந்த நிலையில் அமைச்சர் சேகர்பாபு, பொதுமக்கள் மீது தவெகவினர் தான் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

சேகர்பாபு கூறுகையில், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் சொல்வது உண்மை இல்லை. அங்கே என்ன நடந்தது என்றால் தவெகவினருக்கும் பொதுமக்களுக்கும் தான் சண்டையே நடந்தது. பொதுமக்கள் பாதிக்கப்பட்டு, தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து யாராவது பேட்டி எடுத்து போட்டீர்களா?

பொதுமக்கள் தான் காயம்

ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் சொல்வதையே போடுகிறீர்கள்.. களத்திற்கு சென்று உண்மை என்ன, நடந்தது என்ன என விசாரித்தால் தானே தெரியும். அதேபோன்று ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் யார் என்று விசாரியுங்கள் உங்களுக்கு தெரியும். முழுக்க முழுக்க பொதுமக்கள் தான் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பொதுமக்களுக்கும் அந்த கட்சியை சேர்ந்தவர்களுக்கும் இடையே நடந்த மோதல் தான் இது.. எப்படி பனையூரில் கட்சி அலுவலகத்தில் மோதல் தொடர்ந்துகொண்டு இருக்கிறதோ அதே போலவே இங்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. உண்மையை விசாரித்து போடுங்கள்.. என்று கூறியுள்ளார்.

தவெக தலைவர் விஜய் கண்டனம்

முன்னதாக விஜய் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தார். விஜய் கூறுகையில், "சென்னை, பாரிமுனைப் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது, ஆளும் கட்சியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் அராஜகத் தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது.

இந்தத் தாக்குதலில், நான்கு மாதக் கர்ப்பிணி உள்பட நிர்வாகிகள் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.. அவர்கள் அவசரச் சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு, தீவிரச் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நான்கு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயம் அடைந்த கழகத் தோழர்கள் ஆறு பேரும் விரைவில் குணமடைய விழைகிறேன்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்களிடையே பெருகி வரும் செல்வாக்கைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆளும் கட்சியினர், மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுள்ள நம் கழகத் தோழர்கள் மீது இவ்வாறான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயலாகும். திமுகவின் தோல்வி பயத்தையே இது காட்டுகிறது. இந்த அராஜகத் தாக்குதலில் ஈடுபட்ட ஆளும் கட்சிக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டப் போவது நிச்சயம்!" என்று கூறியிருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+