‘அது வேற வாய்.. இது..’ எடப்பாடிக்கு நாஞ்சில் சம்பத் நறுக் கேள்வி.. விஜய் ஹேப்பி
சென்னை: சட்டமன்ற தேர்தலுக்காக தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுகவை அரசியல் எதிரியாகவும், பாஜகவை கொள்கை எதிரியாகவும் கூறி ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று அறிவித்த தவெக இப்போது பொட்டி பாம்பாய் அடங்கியுள்ளது. பாஜகவை பற்றி வாய் திறக்காமல் திமுக மற்றும் அதிமுகவினரை மட்டும் விமர்சித்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுகவும் விஜய்யை கடுமையாக விமர்சித்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி விஜய்யை விமர்சனம் செய்துள்ள நிலையில், அதற்கு நாஞ்சில் சம்பத் பதில் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகவுள்ளது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என்று 4 முனை போட்டி நிலவுகிறது. திமுக, அதிமுக கிட்டத்தட்ட கூட்டணியை உறுதி செய்துவிட்டனர். நாம் தமிழர் தனித்து போட்டி என்று அறிவித்துவிட்டது. கூட்டணி ஆட்சி என்று அறிவித்த தவெக, யாரும் வராததால் மதில் மேல் பூனையாக தவித்து கொண்டிருக்கிறார்கள்.

விஜய் மீது எடப்பாடி விமர்சனம்
திமுகவை தீயசக்தி என்று விமர்சித்து வரும் விஜய், அதிமுகவை ஊழல் கட்சி என்று விமர்சிக்க தொடங்கியுள்ளார். இது அதிமுகவினரை ரொம்பவே சீண்டியுள்ளது. இத்தனை நாட்களாக தவெகவை சாஃப்ட் கார்னரில் டீலிங் செய்து வந்த அதிமுக, இப்போது கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விஜய்யை கடுமையாக விமர்சித்தார்.
அதில் அவர், "விஜய் நல்ல நடிகர். ஆனால் நாங்கள் தான் நல்ல அரசியல் இயக்கம். அவர் நல்ல அரசியல்வாதி இல்லை. மக்களை சந்திக்காத விஜய் ஒரு தலைவரா. கரூரில் 41 குடும்பங்களை அநாதை ஆக்கிவிட்டார். அவரை பார்ப்பதற்காக தான் மக்கள் வந்தனர். அவர் சரியாக திட்டமிட்டிருந்தால் கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்காது" என்று விமர்சித்தார். இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாஞ்சில் சம்பத் பதிலடி
இதுகுறித்து தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மக்களின் தலைவர் யார் என்பது தமிழ்நாட்டிற்குத் தெரியும். மக்கள் திலகம் புரட்சித்தலைவர் பொன்மன செம்மல் எம்.ஜி.ஆரின் தொண்டர்கள் எங்கிருந்து வந்தார்கள்? அதே புள்ளியில் தான் பூத்திருக்கிறது இன்றைய வெற்றிப் படை. அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அம்மையார் ஆகியோரை மறந்து விட்டீர்களா.
அன்று உண்மையை உரக்கப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமிக்கும்-இன்று தீயசக்தி தி.மு.க-வின் திடீர் ஊதுகுழல் போலத் தான் பேசியதையே மாற்றிப் பேசும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கும் எத்தனை வித்தியாசங்கள இந்த மாற்றத்தின் பெயர்தான் 'தடுமாற்றம்'.
மக்கள் தலைவர் யார் என்பது மக்களுக்குத் தெரியும். தெரியாதது போல நடிக்கும் உங்களுக்கும் அது தெரியும் என்பது எங்களுக்குத் தெரியும். மக்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் ஓங்கி வளர்ந்துள்ள ஒரே தலைவர், எங்கள் வெற்றித் தலைவர் விஜய் அவர்கள் மட்டும்தான்! இதை காலம் விரைவில் புரிய வைக்கும்" என்று கூறியுள்ளார்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications