முருகன் தமிழர் கடவுள்! குடமுழுக்கில் தமிழில் தான் மந்திரங்கள் ஓத வேண்டும்! வேல்முருகன் உரிமைக் குரல்
சென்னை: பழனி முருகன் கோயிலின் குடமுழுக்கு விழாவின் அனைத்து நிகழ்வுகளும் அன்னைத் தமிழிலேயே நடைபெறுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுந்தியுள்ளார்.
தமிழர் கடவுளான முருகன் கோயில் குடமுழுக்கில் தமிழில் மந்திரங்களை ஓதுவதே சிறப்பு என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழில் அர்ச்சனை செய்ய மறுப்பவர்கள் மீது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேல்முருகன் ஆவேசம் காட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

தமிழில் குடமுழுக்கு
தமிழ்நாட்டில் இனி வரும் காலங்களில் அனைத்து கோயில்களில் குட முழுக்குகளில் சமஸ்கிருத மந்திரங்களுக்கு இணையாக, தமிழ் மந்திரங்கள் பயன்படுத்த வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டிருந்தது. அதேபோன்று, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையின் உத்தரவு இருக்கிறது. ஆனால், கோயில் கருவறையில் தமிழில் மந்திரங்கள் ஓதி, அர்ச்சனை செய்ய அரசாணைகள் இருந்தும் கூட, அவை நடைமுறையில் செயல்படுத்தப்படுவதில்லை.

பழனி முருகன் கோயில்
தற்போதைய திமுக அரசு தமிழ் அர்ச்சனைக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறது. ஆனால் தமிழில் அர்ச்சனை செய்பவர்கள் கருவறைக்குள் இல்லை. தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினால், இங்கு வழக்கமாக இருக்கக்கூடிய அர்ச்சகர்கள் மறுப்பதாக மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில், தமிழர் கடவுளான பழனி முருகன் திருக்கோயில் குட முழுக்கு வரும் 2023 ஜனவரி 27ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முருகனுக்கு பொருத்தம்
இதில், தமிழ்க் கடவுள் முருகன் கோவிலின் குடமுழுக்கை முழுமையாக தமிழிலே மந்திரங்களை ஓதுவதே சிறப்பானதாகும். குறிப்பாக, யாகசாலை, கருவறை, விமானம் ஆகிய இடங்களில், குடமுழுக்கு தொடர்பான மந்திரங்கள் ஓதப்படும் போது, தமிழில் மந்திரங்களை நடத்துவதே, தமிழர்களின் குறிஞ்சி நிலத் தெய்வமான முருகனுக்கு பொருத்தமாகும்.

சட்டப்படி நடவடிக்கை
எனவே, பழனி முருகன் திருக்கோயிலின் குடமுழுக்கு விழா 27.01.2023 அன்று நடைபெறவுள்ள நிலையில், இவ்விழாவின் அனைத்து நிகழ்வுகளும் அன்னைத் தமிழிலேயே நடைபெறுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. மேலும், தமிழில் அர்ச்சனை செய்ய மறுப்பவர்கள் மீது பக்தர்கள் புகார் தெரிவிப்பதற்கு வசதியாக கோயில் வளாகத்தில் புகார் பெட்டி வைக்க வேண்டும். அந்தப் புகார்களை விசாரித்து, தமிழில் அர்ச்சனை செய்ய மறுப்பவர்கள் மீது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications