ஸ்டாலின் தான் இதைச் செய்ய வேண்டும்! வேறு ஆளில்லை! வேல்முருகன் வைக்கும் வேண்டுகோள்!
சென்னை: சங் பரிவாரின் அடுத்த இலக்கு தமிழகமாக கூட இருக்கலாம் என எச்சரித்துள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், மோடி அரசுக்கு எதிராக ஒற்றை கருத்துள்ள மாநிலங்களை ஒன்று திரட்ட வேண்டிய பொறுப்பு ஸ்டாலினுக்கு உள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
மதச்சார்பின்மை என்ற இந்தியாவின் அஸ்திவாரத்தை இடித்து நொறுக்க ஆர்.எஸ்.எஸ், பாஜக,சங்கப் பரிவாரங்கள் களம் இறங்கியுள்ளதாக சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

மதச்சார்பின்மை
மதச்சார்பின்மைதான் இந்தியாவின் அஸ்திவாரம். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் அஸ்திவாரமும் அதுதான். ஆனால், அந்த அஸ்திவாரத்தை இடித்து நொறுக்க ஆர்.எஸ்.எஸ், பாஜக,சங்கப் பரிவாரங்கள் களம் இறங்கியுள்ளனர்.குஜராத்தில் அம்மாநில அரசால் இசுலாமிய மக்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைத் தாக்குதல்களைப் போன்று, கர்நாடகத்திலும் அதற்கான வேலைகளில், ஆர்.எஸ்.எஸ், பாஜக,சங்கப் பரிவாரங்கள் ஈடுபடத் தொடங்கி விட்டனர்.

ஆர்.எஸ்.எஸ்
அதன் முன்னோட்டம் தான், கர்நாடகாவில் ஆறு கல்லூரிகளில் ஹிஜாப் அணியத் தடை விதிப்பு. ஹிஜாப் அணிந்து வந்த இசுலாமிய மாணவிகள் கல்லூரிக்குள் அனுமதி மறுப்பு. ஹிஜாபுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ், பாஜக, சங்கப் பரிவாரங்கள் மாணவர்களிடம் மதவெறி வன்முறை தூண்டுதல் என அனைத்து நடவடிக்கையுமே.

சங்ப் பரிவாரங்கள்
ஆர்.எஸ்.எஸ், பாஜக, சங்ப் பரிவாரங்கள் வன்முறை என்பது, கர்நாடகாவோடு நிற்பதில்லை, தமிழ்நாடு, கேரளா என அடுத்தடுத்து மாநிலங்களில் தொடரும். அதுவே, ஆர்.எஸ்.எஸ் வகையறாக்களின் இலக்கு. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி, இந்துக்கள் திருநீறு பூசிக் கொள்ளவும், சீக்கியர்கள் தலைப்பாகை அணிந்து கொள்ளவும், கிறித்தவர்கள் சிலுவை அணிந்து கொள்ளவும், அனுமதிக்கிறது. அதன் நீட்சியாகவே ஹிஜாப் அணியும் முறையும் இருக்கிறது.

ஜனநாயக சக்திகள்
ஆனால், இதனையெல்லாம் புரிந்து கொள்ளாத அல்லது அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காத, சங்கப் பரிவார கும்பல்களின், இசுலாமிய மாணவிகள் ஹிஜாப் அணியக்கூடாதென்று, நடத்திவரும் போராட்டங்களையும், வன்முறைகளையும் முறியடிக்க ஜனநாயக சக்திகள் ஒன்று திரள வேண்டும். ஏனென்றால், சங்கப் பரிவார கும்பல்களின் அடுத்த இலக்கு தமிழ்நாடாக இருக்கலாம்.

மத நல்லிணக்கம்
எனவே, மத நல்லிணக்கத்தையும், மக்கள் ஒற்றுமையையும் ஜனநாயக நடைமுறைகளையும் காலில் போட்டு மிதிக்கும் மோடியின் கும்பலை தூக்கி எரிய, ஒற்றை கருத்துள்ள மாநிலங்களை ஒன்று திரட்ட வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாட்டின் முதல்வருக்கு உள்ளது என்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி சுட்டிக்காட்டுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications