பாஜக உடன் கூட்டணி இல்லை.. அது 100% உறுதி.. பிரஸ் மீட்டில் அடித்துச் சொன்ன தவெக லீடர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என தவெக துணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் உறுதியாகத் தெரிவித்துள்ளார். பாஜக கொள்கை எதிரி என தவெக ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்து பணியாற்றி வருகிறது. ஒருபக்கம் திமுக தலைமையிலான கூட்டணியில், 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அமைத்த அதே கூட்டணி தொடர்ந்து வருகிறது. இன்னொருபுறம் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

TVK Rules Out Alliance with BJP for 2026 CTR Nirmal Kumar Reaffirms Political Opposition

இந்நிலையில், அதிமுக - பாஜக கூட்டணியில் தவெக இணையக்கூடுமா என்ற விவாதங்கள் நடந்து வருகின்றன. திமுக கூட்டணியை வீழ்த்த விஜய், பாஜக - அதிமுக கூட்டணியில் இணைவார் என தொடர்ந்து பேச்சுக்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், பாஜக கூட்டணியில் இணைய மாட்டோம் என தவெக துணை பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் இன்று தெரிவித்துள்ளார்.

வக்பு சட்டத்திற்கு எதிரான வழக்கு தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தார் சிடிஆர் நிர்மல் குமார். வாக்குகளுக்காக நாங்கள் சட்டப் போராட்டம் நடத்தவில்லை, பாதிக்கப்படும் மக்களுக்காகவே எங்கள் தலைவரின் நடவடிக்கை தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.

அப்போது செய்தியாளர்கள், பாஜக உடன் கூட்டணி அமைப்பீர்களா எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சிடிஆர் நிர்மல்குமார், "கூட்டணி தொடர்பாக எங்கள் தலைவர் முடிவு செய்வார். எங்கள் கொள்கை எதிரிகள் யார் என்பதை முன்பே தெளிவாகச் சொல்லிவிட்டோம். கூட்டணி சம்பந்தமாக பேசவேண்டிய காலம் இன்னும் நிறைய இருக்கிறது. தேவையான நேரத்தில் எங்கள் தலைவர் அறிவிப்பார்

தவெக மாநாட்டிலேயே கொள்கை எதிரி யார்? அரசியல் எதிரி யார் என தவெக தலைவர் விஜய் தெளிவாக அறிவித்து விட்டார். அவர்களுடன் கூட்டணி அமைக்க மாட்டோம். பாஜக உடன் கூட்டணி கிடையாது என்பது 100% உறுதி. அதில் மாற்றமே இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.

முன்பு பாஜக ஐடி விங் தலைவராகப் பணியாற்றியவர் சிடிஆர் நிர்மல் குமார். அதன்பிறகு அதிமுகவில் இணைந்த இவர், தற்போது விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு துணை பொதுச்செயலாளராக சிடிஆர் நிர்மல் குமார் பொறுப்பு வகித்து வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+