TVK Candidate List: வில்லிவாக்கத்தில் ஆதவ்? சென்னையின் 16 தொகுதிகளுக்கும் தவெக வேட்பாளர்கள் இவர்களா?
சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பால் சென்னை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பதை பார்க்கலாம். இது குறித்து தோராயமாக ஒரு பட்டியல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவை மாவட்டம் வாரியாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் சென்னை மாவட்டத்தில் 16 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

அவை ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், திருவிக நகர், எழும்பூர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி, ஆயிரம்விளக்கு, அண்ணாநகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி ஆகியவை ஆகும்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளையும் திமுகவே கைப்பற்றியது. அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை.
சென்னை மாவட்டத்தில் மொத்தம் 28.30 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். பெரம்பூர் தொகுதியில் அதிகபட்சமாக 2.22 லட்சம் வாக்காளர்களும், எழும்பூர் தொகுதியில் குறைந்த எண்ணிக்கையிலான வாக்காளர்களும் உள்ளனர்.
வரும் தேர்தலிலும் சென்னை மாவட்டத்தை மொத்தமாக அள்ள திமுக முயற்சித்து வருகிறது. அது போல் அதிமுக கூட்டணி கட்சியும் ஆயத்தமாகி வருகிறது.
இந்த நிலையில் சென்னை மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் யாரெல்லாம் வேட்பாளர்கள் என்ற உத்தேச பட்டியல் ஒன்று இணையத்தில் உலா வருகிறது.
அதை பார்க்கலாம்.
விஜய் - பெரம்பூர்
புஸ்ஸி ஆனந்த்- T நகர்
வெங்கட்ராமன்- மயிலாப்பூர்
ஆதவ் அர்ஜுனா- வில்லிவாக்கம
ராஜ்மோகன்- எழும்பூர்
ஈசிஆர் சரவணன் - ஆலந்தூர்
மரியா வில்சன் - திருவெற்றியூர்
பாலமுருகன் - அம்பத்தூர்
பாலாஜி- கொளத்தூர்
விஜயகுமார் அல்லது அசோக் - துறைமுகம்
தினகரன் - மதுரவாயல்
ஜேசிடி பிரபாகர் - அண்ணாநகர்
V. S. Babu- ஆர்.கே.நகர்
விஷ்ணு - வேளச்சேரி.
சிடிஆர் நிர்மல் குமார்- ஆயிரம் விளக்கு
ஸ்ரீநாத்- சைதாப்பேட்டை
விஜய் இரு தொகுதிகளில் போட்டியிடுவார் என சொல்லப்படுகிறது. அவர் வடசென்னை தொகுதியான பெரம்பூரில் போட்டியிட வேண்டும் என அவர் விரும்பியதாக சொல்லப்படுகிறது.
விஜய் போட்டியிடும் தொகுதி எது என்பதில் மிகப் பெரிய விவாதம் நடந்தது. அதாவது முன்பு விருகம்பாக்கம் (Virugambakkam), வேளச்சேரி, திருச்சி கிழக்கு என பேசப்பட்டது (அவரது பெயருடன் 'V' தொடங்கும் தொகுதிகள்). ஆனால் சமீபத்தில் (பிப் 22-23, 2026) பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என TVK கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆதவ் அர்ஜுனா இதை வலியுறுத்தினார். வடசென்னையில் உள்ள வறுமை, வேலையின்மை போன்ற பிரச்சனைகளை பயன்படுத்தி அவர்கள் மீது ஒரு முத்திரையை ஆட்சியாளர்கள் குத்தப்பார்க்கிறார்கள் என சொல்லப்படுகிறது.
-
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications