புதிய உறுப்பினர் சேர்க்கை செயலி.. நாளை விஜய் வெளியிடப்போகும் அறிவிப்பு.. பரபரக்கும் பனையூர்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சார்பாக புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான செயலியை அக்கட்சியின் தலைவர் விஜய் நாளை அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இதற்காக பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கூடுதலாக சில புதிய அறிவிப்புகளையும் விஜய் வெளியிட உள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தி இருக்கின்றன. திமுக தரப்பில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

ஆனால் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய விஜய் இதுவரை களத்திற்கே வரவில்லை. முதல்முறையாக அவர் தலைமையில் நடந்த போராட்டத்தில் கூட 3 நிமிடங்கள் மட்டுமே பேசினார். இன்னும் ஒவ்வொரு சாலையாக, தெருவாகச் சென்று விஜய் மக்களைச் சந்திக்கத் தொடங்கவில்லை. இதனிடையே தவெக சார்பாக மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மதுரையில் ஆகஸ்ட் 25ஆம் தேதி தவெகவின் 2வது மாநில மாநாடு நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டுக்குப் பின் தொகுதி வாரியாக விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தவெக நிர்வாகிகள் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தவெக சார்பாக நாளை முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாக உள்ளது.
அதாவது தவெக சார்பாக புதிய உறுப்பினர் சேர்க்கை செயலி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிய வந்துள்ளது. ஏற்கனவே தவெக தொடங்கப்பட்ட போதே செயலி ஒன்றை விஜய் அறிமுகப்படுத்தி இருந்தார். அந்த செயலியின் அடிப்படையில் ஒன்றரை கோடி தொண்டர்கள் தவெகவில் இணைந்ததாகக் கூறப்பட்டது. இந்த நிலையில் உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்த விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
ஒவ்வொரு வீடாகச் சென்று உறுப்பினர்களைச் சேர்க்கும் பணிகளில் தவெகவினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே பூத் கமிட்டி அமைக்கும் பணிகளையும் விஜய் தீவிரப்படுத்தி இருக்கிறார். இந்த புதிய செயலி மூலமாக நிர்வாகிகள் செய்யும் பணிகளையும் கண்டறிய முடியும் என்று சொல்லப்படுகிறது. கடந்த வாரமே பனையூர் அலுவலகத்தில் இந்த செயலி அறிமுகம் செய்வதாக இருந்தது.
ஆனால் கடைசி நிமிடத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் நாளை மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் அனைவரும் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். புதிய செயலி அறிமுகம் செய்யப்படுவதோடு, நிர்வாகிகளுக்கு இன்னும் சில உத்தரவுகளையும் விஜய் பிறப்பிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.
-
நேர்மையாக செயல்படுங்கள்.. இல்லைன்னா தொலைச்சிடுவேன்! நகராட்சி அதிகாரிகளுக்கு விஜய் எச்சரிக்கை -
ஸ்ரீவைகுண்டம் கொடூரம்: “யார் அந்த மேலிடம்? முதல்வரை தாண்டிய பவர் சென்டரா?" விஜய்க்கு எடப்பாடி கேள்வி -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
அம்மா கொடுத்த அனுமதி.. ரஜினியை போல் விஜய்யும் எனக்கு நெருக்கம்.. ராகவா லாரன்ஸ் சொன்ன வார்த்தை! -
திருச்சி, கோவை, சென்னை.. அடியோடு மாறப்போகுது.. விஜய்யின் 5 மாஸ்டர்பிளான்.. டெல்லியில் பேசியது என்ன? -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அமைச்சரவையில் இடம்.. இதனால்தான் விஜய்யை ஆதரித்தோமா? ஐயுஎம்எல் காதர் மொய்தீன் விளக்கம்! -
வருகிறது சென்னை டூ கன்னியாகுமரி HSR ரயில்.. விஜய் பிடித்த பாயிண்ட்.. மோடி மீட்டிங்கில் செம சம்பவம்! -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்!












Click it and Unblock the Notifications