கரூர் துயரம்.. அப்பாவி மக்களின் உயிரிழப்பு நெஞ்சை உலுக்கி வேதனை அளிக்கிறது.. ரஜினிகாந்த் இரங்கல்!
சென்னை: தவெக பிரச்சார கூட்டத்தில் குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் உட்பட 34 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனையளிக்கிறது என்று கூறியுள்ள ரஜினிகாந்த், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தோருக்கு ஆறுதல்கள் என்று தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் சிக்கி 34 பேர் உயிரிழந்தனர். கரூரில் விஜய்யை பார்க்க அதிகளவு கூட்டம் கூடிய நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் மயக்கம் அடைந்துள்ளனர். இதன்பின் உடனடியாக தண்ணீர் கொடுக்கப்பட்டு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. இதன்பின் மயக்கம் அடைந்த பலரையும் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதன்பின் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 34 பேர் உயிரிழந்தனர். பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் உட்பட பல்வேறு தரப்பினரும் உயிரிழந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் உடனடியாக தலைமைச் செயலகத்தில் அவசர மீட்டிங்கில் ஈடுபட்டார். இதன்பின் தனி விமானம் மூலமாக உடனடியாக கரூர் வரவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
கரூரில் நடந்த துயரச் சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த், கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனையளிக்கிறது.
உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தோருக்கு ஆறுதல்கள் என்று பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அடைக்க மாவட்ட நிர்வாகத்தை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications