கருகுது இரட்டை இலை.. விஜய் வைத்த டார்கெட்! வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக! சிக்கும் திமிங்கலம்?
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மாநில அரசியலில் தொடர்ந்து பரபரப்பான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் தவெகவை நோக்கி நகர்ந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வரும் உள்ளாட்சித் தேர்தலை இலக்காக வைத்து தவெக அதிமுகவில் இருந்து மேலும் பல தலைகளை தூக்க திட்டமிட்டுள்ளதாம்.
சட்டப்பேரவைத் தேர்தலில் பெற்ற வெற்றியை உள்ளாட்சித் தேர்தலிலும் தொடர வேண்டும் என்ற நோக்கத்தில், மற்ற கட்சிகளில் செல்வாக்குடன் இருக்கும் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத் தலைவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் கட்சி தலைமையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக இந்த நடவடிக்கைகளில் அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள்தான் அதிக அளவில் தவெகவில் இணைந்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர்களான வெல்லமண்டி நடராஜன், கடம்பூர் ராஜு, எம்.சி. சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.ஆர். சிவபதி உள்ளிட்ட பலர் தவெகவில் இணைந்துள்ளனர்.
அதிமுக
இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் எம்.பி.க்களான பாலகங்கா, வனரோஜா, முன்னாள் நெல்லை மேயர் புவனேஸ்வரி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதாரணி உள்ளிட்டோரும் சமீபத்தில் தவெகவில் இணைந்தனர். இதனால் அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட பாரம்பரிய கட்சிகளின் அடித்தள வாக்கு வங்கி மற்றும் நிர்வாக அமைப்பில் தாக்கம் ஏற்படுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
தவெக தலைமையின் தற்போதைய இலக்கு உள்ளாட்சித் தேர்தல் என்று கூறப்படுகிறது.
உள்ளாட்சித் தேர்தல்
சட்டப்பேரவைத் தேர்தலில் கிடைத்த மக்கள் ஆதரவை உள்ளாட்சித் தேர்தலிலும் முழுமையாக பயன்படுத்தி, மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி அமைப்புகளில் அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் கட்சி செயல்பட்டு வருகிறது. அதற்காக தேர்தல் அனுபவம் கொண்ட நிர்வாகிகள், உள்ளூர் செல்வாக்கு மிக்க தலைவர்கள் மற்றும் பிற கட்சிகளில் அதிருப்தியில் உள்ள முக்கியப் பிரமுகர்களை அடையாளம் கண்டு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புஸ்ஸி ஆனந்த்
இந்த நடவடிக்கைகளின் மையமாக பனையூர் அலுவலகம் மாறியுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரடியாக பல்வேறு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை உள்ளிட்ட மாநகரப் பகுதிகளில் மட்டுமல்லாமல், கிராமப்புறங்களிலும் தவெக தனித்துவமான அணுகுமுறையை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை மாநகராட்சி
குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அன்றாட பிரச்சினைகளை முன்வைத்து மக்கள் மத்தியில் களப்பணிகளை மேற்கொள்ள கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் வலுவான வேட்பாளர்களை நிறுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. மக்கள் மத்தியில் ஏற்கனவே அறிமுகம் பெற்றவர்கள், உள்ளூர் அளவில் செல்வாக்கு கொண்டவர்கள் மற்றும் தேர்தல் அனுபவம் உள்ளவர்களை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிருப்தி நிர்வாகிகள்
இதற்காக பல்வேறு கட்சிகளில் இருந்து அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளுடன் ரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல்களில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தவர்கள், கட்சிகளில் ஓரங்கட்டப்பட்டவர்கள் மற்றும் உள்ளூர் அளவில் ஆதரவாளர்கள் கொண்ட நிர்வாகிகள் மீது தவெக கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. தவெக வட்டாரங்கள் கூறுகையில், "உள்ளாட்சி அமைப்புகளை கைப்பற்றினால்தான் மாநில அளவிலான அரசியல் இலக்குகளை முழுமையாக அடைய முடியும் என்ற நம்பிக்கை கட்சித் தலைமையிடம் உள்ளது. அதனால் தேர்தலுக்கு இன்னும் காலம் இருந்தாலும், இப்போதே களப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கின்றனர்.
விஜய் வைத்த டார்கெட்
சட்டப்பேரவைத் தேர்தலில் பெற்றதாக கூறப்படும் 35 சதவீத வாக்கு ஆதரவை உள்ளாட்சித் தேர்தலிலும் முழுமையாக மாற்றி வெற்றியாக்க வேண்டும் என்ற இலக்குடன் தவெக செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக எதிர்க்கட்சிகளில் இருந்து தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் தவெகவை நோக்கி நகரும் சூழல் உருவாகியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகின்றனர். உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் நிலையில், தவெகவின் இந்த அதிரடி நகர்வுகள் தமிழக அரசியலில் மேலும் பல பரபரப்பான மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்கின்றனர் தவெகவினர்.
-
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
ஆல் ஏரியாலயும் அய்யா கில்லி.. கர்நாடகாவை அதிர வைத்த விஜய் பயணம்! தேசிய அரசியலுக்கு தொடக்கப் புள்ளி? -
தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை.. 202 போதைப்பொருள் குற்றவாளிகள் உட்பட 1,328 பேர் கைது! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
அரசியல் சதுரங்கத்தில் சறுக்கிய விஜயதாரணி! ‘அமைச்சர்’ வாய்ப்பை கோட்டை விட்டாரா விளவங்கோடு சிங்கப்பெண் -
பேய் பிசாசு நலத்துறை அமைச்சர் ராகவா லாரன்ஸ்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. தெறிக்கும் மீம்ஸ்! -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
விஜய்யை அவமானப்படுத்திய கர்நாடக காங்., அமைச்சர் யுடி காதர்? வரவேற்க போய் பூங்கொத்து கூட கொடுக்கலையே! -
50+ வீடியோ.. சேலம் மணிகண்டன்.. சிபிஎம், டிடிவி தினகரன் விஜய்க்கு வைத்த கோரிக்கை -
பிரசாதங்களை கோவில்களிலேயே தயாரிக்க வேண்டும்.. 3 மாதம் கெடு.. அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications