எல்லாரும் எனக்காக ஒரு நிமிஷம் எழுந்து நில்லுங்க ப்ளீஸ்.. பேசி கொண்டிருக்கும் போதே விஜய் செய்த செயல்!
சென்னை: கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தொண்டர்களிடையே விஜய் உரையாற்றினார். மாநில மாவட்ட அளவிலான கழக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், நிர்வாகிகள் அனைவரையும் எழுந்து நிற்க வைத்து உறுதிமொழி ஏற்க செய்தார்.
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று (ஜனவரி 25) மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாநில மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் கலந்துகொண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்க, க்யூஆர் குறியீடு கொண்ட அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டிருந்தது.

தவெக செயல்வீரர்கள் கூட்டம்
அந்த அனுமதிச் சீட்டு பெற்றவர்கள் மட்டுமே கூட்டத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்தல் ஆணையம் தவெகவுக்கு 'விசில்' சின்னத்தை ஒதுக்கிய நிலையில், விஜய் மேடைக்கு வந்தபோது தொண்டர்கள் விசில் அடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, மொழிப்போர் தியாகிகளுக்கும், கொள்கைத் தலைவர்களுக்கும் விஜய் அஞ்சலி செலுத்தினார். இந்தக் கூட்டத்தில் விஜய் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிகமாக இருந்தது.
விஜய் உரை
வழக்கம்போலவே உணர்ச்சிவசப்பட்டும் நேரடியாகவும் பேசிய விஜய், "நாம் மிக முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம் என்பதை முதலில் அழுத்தமாக சொல்லிக்கொள்கிறேன். நமக்கு ஏதாவது அழுத்தம் இருக்குமோ என்று நினைக்கிறீர்களா? அழுத்தமா? நமக்கா? அப்படியெல்லாம் இல்லை. இப்படிப்பட்ட அழுத்தங்களுக்கு அடங்கிப் போகிற ஆளா நான்? அழுத்தம் இருக்கிறதா என்றால், அழுத்தம் உள்ளது. ஆனால் அது நமக்கு இல்லை. மக்களுக்கு இருக்கிறது. மாற்றி மாற்றி ஏமாந்த மக்கள் இன்று கடும் அழுத்தத்தில் இருக்கிறார்கள்.
அதிமுக மீது விமர்சனம்
அதனால்தான் மக்கள் தவெகவை நம்புகிறார்கள். அடிமையாக இருக்க நான் அரசியலுக்கு வரவில்லை. விஜய் இப்போதுதான் வந்திருக்கிறார்; இவருடன் யார் வரப் போகிறார்கள் என்று நம்மை குறைத்து மதிப்பிடுகிறார்கள். 30 ஆண்டுகளாக என்னை குறைத்து மதிப்பிட்டார்கள். ஆனால் மக்கள் எப்போதும் சரியாக மதிப்பிட்டிருக்கிறார்கள் நான் ஊழல் செய்யவே மாட்டேன். ஒரு பைசாவையும் தொட மாட்டேன். எனக்கு அதைத் தொட வேண்டிய அவசியமே இல்லை. ஒரு துளி ஊழல் கூட படிய விட மாட்டேன். மக்கள் எனக்கென்று இருக்கிறார்கள். பாஜகவிடம் அதிமுக நேரடியாக சரண் அடைந்துவிட்டது.
திமுக
திமுக ஒரு தீய சக்தி. தவெக மீது மக்களுக்கு நம்பிக்கை வரும் வகையில் கட்சியினர் செயல்பட வேண்டும் யாரென்ன சூழ்ச்சி செய்தாலும், எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் தாம் அடங்கிப் போக மாட்டேன் என்றும், தவறு செய்தால் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது என்ற பயம் இருக்க வேண்டும். கட்சியினர் அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேர்தல் பணியாற்ற வேண்டும். யாருக்காகவும் எதற்காகவும் தங்களது அரசியலை சமரசம் செய்து கொள்ளக் கூடாது" என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தவெக நிர்வாகிகள் உறுதிமொழி
நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருக்கும்போதே திடீரென நிர்வாகிகள் அனைவரையும் எனக்காக ஒரு நிமிடம் எழுந்து நில்லுங்கள் என சொன்ன விஜய் தான் சொல்லும் உறுதி மொழியை அனைவரும் திரும்பச் சொல்ல வேண்டும் என கேட்டுக் கொண்டார் பின்னர் " இந்த 2026 சட்டமன்ற தேர்தலில், நாம எல்லாரும் உண்மையாக உழைப்போம். சத்தியமாக உழைப்போம். உறுதியாக உழைப்போம். ஒற்றுமையாக உழைப்போம்" என உறுதிமொழி ஏற்க சொல்லிவிட்டு அமர வைத்தார். குறிப்பாக ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும் என விஜய் அறிவுறுத்தியுள்ளதன் மூலம் கட்சியில் இருக்கும் உட்கட்சி பூசல்களால் விஜய் அதிருப்தியில் இருப்பதாகவும் அதனால்தான் ஒற்றுமையுடன் அவர் பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Vijay: "உங்க விஜய் இன்று புதுவைக்கு வராரு" என்ன பேச போகிறார்? 11 நிபந்தனைகள் விதித்த போலீஸ்! -
தேர்தல் தேதி கூட தெரியலையே.. இவர் தான் தவெக வேட்பாளராம்.. ஒரே அவமானமா போச்சே -
களத்தில் தலைவரை காணோம்.. தேர்தல் ஹீட்டிலும் பனையூரில் ரெஸ்ட்? தவெக தொண்டர்களையே கதறவிடும் விஜய்! -
தவெகவுடன் பேசியதை சொல்லட்டுமா.. தினகரன் குறித்து புட்டு புட்டு வைத்த முன்னாள் எம்எல்ஏ -
நீட் பயிற்சி மையத்திற்கு ரூ.20 கோடி கடன் கொடுத்த விஜய்? அனிதா மரணத்திற்கு ஆறுதல் சொன்னது பொய்யா? -
TVK Vijay in Trichy LIVE: மகளிருக்கு மாதம் ரூ.2,500.. சொன்ன மாதிரி கொடுப்போம்.. விஜய் பேச்சு -
முத்தம் கொடுத்து விஜய் சொன்ன வார்த்தை..விஜய் தான் பெரிய நம்பிக்கை! தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் ஓபன் டாக் -
ஷாக்! விஜய் வேட்புமனுவிலேயே செய்த பெரிய பிழை! திருச்சி கிழக்கு, பெரம்பூரில் நிராகரிக்கப்பட வாய்ப்பு? -
இளைஞர்கள் ஆதரவு.. விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீங்க? ஆ.ராசா சொன்ன கருத்து! -
ஆதவ் அர்ஜுனா கார் மோதி போலீஸ்காரர் கால் முறிந்தது.. திருச்சி விஜய் பிரச்சாரத்தில் அதிர்ச்சி -
திருப்பரங்குன்றம் தொகுதியில் சிடிஆர் நிர்மல்குமார்.. அதிருப்தியில் தவெக! பின்னணியில் ராஜன் செல்லப்பா -
TN 2026 படத்தில் விஜய் ரோலா? தன்னுடைய கெட்டப் பற்றி நட்டி ஓபனா பேசிட்டாரே? பின்னணி சம்பவம் பெருசா இருக்கு












Click it and Unblock the Notifications