கரூர் சம்பவத்திற்கு பின்.. நாங்கள் தலைமறைவாக இருந்தோமா.. தவெக நிர்வாகி ராஜ்மோகன் பேட்டி!
சென்னை: கரூர் சம்பவத்திற்கு பின் தவெகவில் யாரும் தலைமறைவாக இல்லை என்று அக்கட்சியின் இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். நாங்கள் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருந்தோமே தவிர, தலைமறைவாக இல்லை என்று கூறிய அவர், தவெகவில் அனைத்து பொறுப்புகளும் நிரப்பப்பட்டுவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார், ராஜ்மோகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். கரூர் சம்பவத்திற்கு பின் புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல் குமார் மற்றும் ராஜ் மோகன் ஆகியோர் தலைமறைவாகினர்.

இதில் ராஜ்மோகன் குறித்து சோசியல் மீடியாவில் ஏராளமான மீம்ஸ் வெளியாகியது. அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படாமல், எதற்காக தலைமறைவாக இருக்கிறார் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இதில் பெரும்பாலானோர் தவெகவைச் சேர்ந்தவர்கள் தான். இந்த நிலையில் நிர்வாகக் குழு கூட்டத்தில் ராஜ்மோகன் பங்கேற்றது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகியது.
இந்த நிலையில் நிர்வாகக் குழு கூட்டத்திற்கு பின் ராஜ்மோகன் பேசுகையில், கரூர் சம்பவத்திற்கு பின் தவெகவின் 2ஆம் கட்டத் தலைவர்கள் நேரில் சென்று பார்க்க அனுமதி அளிக்கப்படவில்லை. நான் தனியாக திருச்சி நெடுஞ்சாலையில் தான் அறை எடுத்து தங்கி இருந்தேன். இதன்பின் நீதிமன்ற விசாரணைக் கோரி தவெக நகர்ந்துவிட்டது.
அமைதியே நீதியின் இறுதி வடிவம் என்று சொல்வார்கள். அதனால் அமைதியாக இருக்கும் போது அவதூறுகள், அடிகள் வரத்தான் செய்யும். அதனை கடந்துதான் அரசியல் செய்ய வேண்டும். மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும். அதற்கான பாதையில் நாங்கள் செல்கிறோம். அமைதிப் பாதையே நீதியே சென்று சேரும் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து சிடிஆர் நிர்மல் குமார் மற்றும் ராஜ்மோகன் பேசுகையில், தவெகவில் எங்கேயும் யாரும் தலைமறைவாக இருக்கவில்லை. நாங்கள் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருந்தோம். அடுத்தக் கட்ட நகர்வாக 41 பேரின் குடும்பங்களை பார்க்க வேண்டும் என்பதே நிர்வாகிகளின் நோக்கமாக இருந்தது. அந்த ஒரு வாரத்தில் கட்சியை முடக்க வேண்டும் என்று நினைத்தார்கள்.
அது உச்சநீதிமன்றம் மூலம் தவிடுபொடியாகி இருக்கிறது. தவெகவில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுவிட்டனர். சில மாவட்டங்கள் பிரிக்கப்படாததால், இன்னும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்படவில்லை. அதேபோல் பொறுப்பாளர்கள் மூலமாகவே தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிரப்பப்பட வேண்டிய பொறுப்புகள் விரைவில் நிரப்பப்படும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications