வீட்டிற்கு வந்த ஜோசியர்.. சொன்ன பேச்சை தட்டாமல் கேட்கும் விஜய்.. அப்போ தவெக? அதிர வைத்த பின்னணி
சென்னை: தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் மிக தீவிரமாக ஒரு ஜோசியரை நம்பி இருப்பதாக கூறப்படுகிறது. அந்த ஜோசியர் சொல்லும் விஷயங்களை எல்லாம் விஜய் அப்படியே தட்டாமல் கேட்கிறார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜயிடம்.. ஜனவரி வரை சவால்கள் இருக்கும்.. அதற்கு பின் இப்போது நிலவும் நிலைமை சரியாகிவிடும் என்று அந்த ஜோசியர் கூறி இருக்கிறார்.
கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் 41 பேர் பலியானார்கள். இந்த விவாகரத்திற்கு பின் அரசியல் ரீதியாக விஜய் அப்படியே முடங்கிப்போய் உள்ளார். அவருக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள், கண்டனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

விஜய் மீது வலுக்கும் விமர்சனங்கள்
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கூட, கரூர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியவருக்கு தலைமை பண்பே இல்லை. விஜய்க்கு தலைமை பண்பு இல்லை. விஜய் தொண்டர்கள் ரசிகர்கள் மக்களை கைவிட்டு பொறுப்பற்ற முறையில் வெளியேறியுள்ளார் அதேபோல் விஜய் பிரச்சார ஏற்பாட்டாளர்கள் மீது கருணை காட்டாதீர்கள். வழக்கு பதிவு செய்க,. நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஆதவ் அர்ஜுனா போட்ட பதிவு குறித்து விசாரிக்க வேண்டும். அதன் பின்புலத்தை விசாரிக்க வேண்டும். எதன் அடிப்படையில் போஸ்ட் செய்யப்பட்டது. இவர்கள் எல்லாம் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா? அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு. சட்டத்திற்கு முன் அனைவரும் சமம், எனவே இந்த சம்பவத்தில் அரசு அமைதியாக இருக்கக்கூடாது. தமிழக அரசு ஆதவ் அர்ஜூனா டெலிட் செய்யப்பட்ட போஸ்டை காட்டிய நிலையில் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
வீட்டிற்கு வந்த ஜோசியர்
விஜயின் பெரும்பாலான முடிவிற்கு அரசியல் தாண்டி.. அவரின் ஜோசியர் ஒருவர்தான் காரணம் என்றும் கூறப்படுகிறது. அதாவது அரசியல் ரீதியாக அவர் முடிவுகளை எடுக்காமல் பல இடங்களில் ஜோசியர் சொன்னதை கேட்டு முடிவு எடுப்பதாக கூறப்படுகிறது. முக்கியமாக அந்த ஜோசியர்தான் பிரச்சாரத்தில் எந்த தேதியில் பேச வேண்டும் என்று சனிக்கிழமை ஐடியாவை கொடுத்ததாக கூறப்படுகிறது.
கரூர் சம்பவத்திற்கு பின்பும் கூட அடிக்கடி ஜோசியர் உடன் விஜய் ஆலோசனை செய்து வருகிறாராம். ஜோசியர் அடிக்கடி விஜய் வீட்டிற்கு சென்று ஆலோசனை செய்து உள்ளாராம். இப்போது நேரம் உங்களுக்கு சரியில்லை. உங்கள் ஜாதகப்படி இப்போது கொஞ்சம் கஷ்டம். ஜனவரிக்கு பின் எல்லாம் சரியாகிவிடும். அதுவரை கொஞ்சம் யோசித்து காய் நகர்த்தவும் என்று அந்த ஜோசியர் அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.
ஜனவரி வரை சவால்கள் இருக்கும். அதற்கு பின் நிலைமை சரியாகிவிடும் என்று அந்த ஜோசியர் கூறி இருக்கிறார். விஜய் தான் எடுக்கும் பெரும்பாலான முடிவுகளை அந்த ஜோசியர் சொன்னதை கேட்டே எடுப்பதாக கூறப்படுகிறது. அந்த ஜோசியர் சொல்லும் விஷயங்களை எல்லாம் விஜய் அப்படியே தட்டாமல் கேட்கிறார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
TVK அரசியல் முடிவுகளை கூட அவர் இதை நம்பித்தான் எடுக்கிறார். தவெக எல்லாம் இருக்கட்டும்.. பர்சனல் முடிவுகளை கூட அவரை நம்பித்தான் எடுக்கிறார். விஜய் பெரும்பாலும் அரசியல் ஆலோசகர்கள் சொல்வதை விட.. இந்த ஜோசியர் சொல்வதைத்தான் அதிகம் கேட்கிறார். நம்பிக்கை இருக்கலாம்.. ஆனால் பல முடிவுகளை அதை வைத்து எடுப்பது சரியில்லை என்று அவருக்கு நெருக்கமான சிலர் புலம்பி வருகிறார்களாம்.












Click it and Unblock the Notifications