வீடு புகுந்து மிரட்டிய தவெக நிர்வாகிகள்! கோர்ட்டில் வாக்குமூலம் தந்த மனுதாரர்! நீதிபதிகள் கண்டிப்பு!
சென்னை: தமிழக வெற்றிக் கழக விஜய் பயணத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த மனுதாரரின் வழக்கறிஞர் கே. கதிரேசன், வழக்குத் தொடர்ந்ததற்காக தனது கட்சிக்காரரை தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் மிரட்டியதாக நீதிபதிகளிடம் புகார் அளித்தார்.
கரூர் கூட்ட நெரிசல் விசாரணையை சிபிஐக்கு மாற்றுவது, இது போன்ற கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது போன்ற கோரிக்கைகளுடன் தொடரப்பட்ட பொதுநல வழக்குகள் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிராமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்துள்ளது. 7 பொதுநல வழக்குகள் ஒன்றன் பின் ஒன்றாக விசாரிக்கப்படும் என நீதிபதிகள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் மிரட்டுகிறது - வழக்கறிஞர் வாதம்
இன்று விசாரணையின் போது.. தமிழக வெற்றிக் கழக விஜய் பயணத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த மனுதாரரின் வழக்கறிஞர் கே. கதிரேசன், வழக்குத் தொடர்ந்ததற்காக தனது கட்சிக்காரரை தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் மிரட்டியதாக நீதிபதிகளிடம் புகார் அளித்தார். மனுதாரரின் வீட்டிற்குள் கட்சிக்காரர்கள் அத்துமீறி நுழைந்ததாக அவர் குறிப்பிட்டார். இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதிகள் போலீசுக்கு அறிவுறுத்தினார்.
அரசு தரப்பு வாதம்
தமிழக அரசு தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், கரூரில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரை நிகழ்ச்சி நடத்த அனுமதி கேட்டது தவெக. அந்த இடத்தை கட்சியே தேர்ந்தெடுத்தது. 27ம் தேதி செப்டம்பர் பிற்பகல் 3 மணி முதல் 10 மணி வரை அனுமதி கோரப்பட்டது. வேலுச்சாமிபுரம் பகுதியில்தான் அனுமதி கோரப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை அருகே அல்ல. Notified இடத்தில்தான் அனுமதி வழங்கப்பட்டது. விஜய் தாமதமாக வந்தார். அது சிக்கலானது.
கூட்டங்களை நடத்துவது தொடர்பாக இனி நிலையான செயல்பாட்டு நடைமுறையை உருவாக்கும் வரை, எந்தவொரு அரசியல் கட்சிக்கும் தமிழக காவல்துறை கூட்டங்களுக்கு அனுமதி வழங்காது, என்று குறிப்பிட்டார்.
மனுக்கள் தள்ளுபடி
இந்த நிலையில் பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கான நிலையான நடைமுறையை உருவாக்க வலியுறுத்திய பொதுநல மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மை நீதிபதி என். சதீஷ்குமார் ஏற்கனவே அத்தகைய வழிகாட்டுதல்களை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருப்பதை அறிந்த நீதிபதிகள் இந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.
நீதிபதிகள் கேள்வி
வழக்கில் நீதிபதிகள் கேட்ட கேள்வியில் விஜய் பிரச்சாரத்திற்கு மாநில நெடுஞ்சாலையில் எப்படி அனுமதி கொடுத்தீர்கள்?. அனுமதி கொடுத்ததற்கான கடிதம் எங்கே? கரூர் பிரச்சாரத்தில் குடிநீர் வழங்கப்பட்டதா?.
குடிநீர், சுகாதார வசதிகள் செய்யப்பட்டிருக்கிறதா? என்பதை சட்டம் ஒழுங்கு காவலர்கள் கண்காணித்தார்களா?. பொதுமக்களின் உயிரை பாதுகாக்க வேண்டியது காவல்துறையின் பொறுப்பு. தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் பிரச்சாரங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது, என்று உத்தரவிட்டனர்.
சிபிஐக்கு எதிர்ப்பு
பொது நல மனுக்கள் மீதான விசாரணையில் அரசு தரப்பு வழக்கறிஞர் உயர்நீதிமன்றம் கிளையில் வாதம் வைக்கையில், இந்த வழக்கில் சிபிஐ விசாரணை அவசியம் இல்லை. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்ட நெரிசல் குறித்து சிபிஐ விசாரணை கோரும் வழக்கில் எந்த சட்டவிரோத செயலையும் குறிப்பிடவில்லை, அதனால் சிபிஐ விசாரணை அவசியம் என்று தமிழக அரசு வாதம் வைத்தது.
இதையடுத்து சிபிஐ விசாரணை மற்றும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும் இழப்பீடு வழங்கக் கோரிய கே.கே. ரமேஷின் பொதுநல மனுவில் இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு விஜய் மற்றும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் எம். தண்டபாணி மற்றும் எம். ஜோதிராமன் உத்தரவிட்டனர்.
-
அரசு ஊழியர்களை பந்தாடும் விஜய்.. சென்னையில் நடப்பது என்ன? -
இது லிஸ்ட்லயே இல்லையே? பட்ஜெட்டுக்கு முன் முழு பயிர்க் கடன் தள்ளுபடி? விஜய் கையில் வேற லெவல் ப்ளான்! -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
தமிழ்நாட்டில் ஹையோசங் டிஎன்எஸ் புதிய தொழிற்சாலை.. ஏடிஎம் உற்பத்திக்கு திட்டம்! -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது!












Click it and Unblock the Notifications