தவெக தலைவர் விஜய், பவுன்சர்கள் மீது வழக்குப் பதிவு.. பெரம்பலூர் போலீஸார் நடவடிக்கை
சென்னை: மதுரை பாரபத்தியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில், தொண்டரை தாக்கிய குற்றச்சாட்டில், தவெக தலைவர் விஜய், பவுன்சர்கள் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் கடந்த 21 ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் தவெக தலைவரும், நடிகருமான விஜய்யை பார்ப்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் ஆர்வத்துடன் மதுரைக்கு வந்தனர். இதனால், மதுரை மாவட்டமே களைகட்டியது.

மாநாட்டு மேடைக்கு முன்பாக மிகப் பிரம்மாண்டமான ரேம்ப் அமைக்கப்பட்டிருந்து. அப்போது, லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் விஜய் ரேம்ப் வாக் சென்று, மக்களுக்கு கையசைத்தார். அப்போது, விஜயின் அருகில் செல்வதற்காக தொண்டர்கள் சிலர் 'ரேம்ப் வாக்' மேடையின் மீது ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, விஜயின் பவுன்சர்கள் தொண்டர்களை அப்புறப்படுத்தினர்.
ரேம்பின் மீது ஏறிய பெரம்பலூர் மாவட்டம், பெரியம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த சரத்குமார் என்பவரை பவுன்சர்கள் குண்டுக்கட்டாக தூக்கி கீழே வீசினர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் விவதாப் பொருளானது.
இந்நிலையில், தவெக தொண்டர் சரத்குமார் மற்றும் அவரது தாயார் சந்தோசம் ஆகிய இருவரும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகனிடம் விஜய் மற்றும் பவுன்சர்கள் மீது நேற்று புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில், தவெக தலைவர் விஜய் மற்றும் 10 பவுன்சர்கள் மீது 3 பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
யார் திட்டத்திற்கு யார் ஸ்டிக்கர் ஒட்டறது.. நிதி ஆயோக் கூட்டம்.. விஜய் மீது உதயநிதி விமர்சனம் -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
“கரண்ட்டே இல்ல.. விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய்” - எடப்பாடி கடும் தாக்கு! -
அமைச்சரவையில் இடம்.. இதனால்தான் விஜய்யை ஆதரித்தோமா? ஐயுஎம்எல் காதர் மொய்தீன் விளக்கம்! -
அரசு மருத்துவமனைகளில் புரட்சி.. இனி மொபைல் ஆப் மூலம் டோக்கன் முன்பதிவு.. விஜய் அரசின் புதிய முடிவு! -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
தமிழக அரசியலில் அடுத்த அதிரடி! 5 தொகுதிகளுக்கு ஆகஸ்டில் இடைத்தேர்தல்? ஜூலை கடைசியில் தேதி அறிவிப்பு -
கம்ப்ளைன்ட் கொடுக்க போன என் மீதே கேஸ் போட்டுட்டாங்க.. பிளான் பண்ணி பண்ணுறாங்க! ஜூலி ஆதங்கம் -
101 தவெக எம்எல்ஏக்களுக்கு ரூல்ஸ் சொல்லி கொடுக்கணும்..முதல் முறை வென்ற 145 பேருக்கு 2 நாள் பயிற்சி -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
கயத்தாறு சம்பவம்.. ஆணவக்கொலை அல்ல! காவல்துறை அளித்த விளக்கம்! வதந்தி பரப்ப வேண்டாம் என வார்னிங்












Click it and Unblock the Notifications