எல்லாம் ஓவர்? விஜய் கையில் ரிப்போர்ட்.. கூட்டணியை தவிர வேறு வழியே இல்லையா.. என்னங்க நடக்குது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜயின் கையில் முக்கியமான ரிப்போர்ட் ஒன்று சென்றுள்ளதாக அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரூரில் 41 பேர் தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. அக்கட்சிக்கு மிகப்பெரிய அளவில் களங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள், மூத்த தலைவர்கள் எல்லோரையும் இந்த நிகழ்வு மொத்தமாக முடக்கி உள்ளது. இரண்டாம் கட்ட தலைவர்கள் பலர் மொத்தமாக தலைமறைவாகி உள்ளனர்.

TVK Vijay

இதனால் தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜயின் அரசியல் பெரிய சிக்கலை சந்தித்து உள்ளது. விஜய் அரசியல் ரீதியாக கடும் நெருக்கடியில் சிக்கி உள்ளார். கட்சி தொடங்கி 1 வருடத்தில்.. விஜய் எதிர்பார்க்காத நெருக்கடிகளை சந்தித்து உள்ளார்.

விஜய் எடுத்த சர்வே

இந்த நிலையில்தான் கட்சி தொடர்பாக விஜய் அவசர அவசரமாக முக்கியமான சர்வே ஒன்றை நடத்தி உள்ளாராம். அந்த சர்வேயில் விஜய்க்கு எதிராக கடுமையான சில கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளதாம். அதன்படி தீவிர விஜய் ரசிகர்கள், இந்த சம்பவத்தில் அரசு மேல் கோபமாக இருக்கிறார்கள். அரசு மேல் விமர்சனங்களை வைக்கிறார்கள். அரசுக்கு எதிராக நிற்கிறார்கள்.

ஆனால் தீவிர விஜய் பேன்ஸ் அல்லாதவர்கள் விஜய் மீது கடும் கோபத்தில் உள்ளார்கள். இளைஞர்கள் அல்லாத குடும்பத்தினர், பெண்கள் எல்லாம் விஜய் மீது கோபத்தில் உள்ளனர். ஒரு காலத்தில் விஜய் மீது நம்பிக்கையாக இருந்த குடும்பத்தினர் பலர் அவருக்கு எதிராக திரும்பி உள்ளார்களாம் . இன்னொரு நாம் தமிழர் , தேமுதிக வாக்குகள் சில விஜய்க்கு செல்வதாக இருந்தது.

அந்த வாக்குகள் எல்லாம் மீண்டும் அவர்களை நோக்கி செல்ல தொடங்கி உள்ளது. விஜய்க்கு இந்த வாக்குகள் மீண்டு வராது என்று அந்த சர்வே தெரிவிக்கிறதாம். இந்த சர்வே காரணமாக விஜய் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் அதிர்ச்சி

இந்த சர்வே காரணமாக விஜய் கொஞ்சம் அதிர்ச்சியில் இருக்கிறாராம். இது அவரின் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்காது. ஆனால் தனித்து அரசியலில் களமாட முடியாது என்பதை விஜய் உணர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது. அதாவது அரசியலில் அவர் தனியாக நின்றால்.. இந்த மக்கள் எதிர்ப்பை வைத்துக்கொண்டு அவர் சமாளிக்க முடியாது. இதனால் கூட்டணிக்கு சென்றே ஆக வேண்டும் என்று அரசியல் ஆலோசகர்கள் சிலர் விஜய்க்கு அறிவுறுத்தி உள்ளார்களாம்.

கூட்டணியை தவிர வேறு வழியே இல்லையா என்று விஜய் கேட்டதற்கு.. கூட்டணி இல்லாமல் நிற்கலாம்.. ஆனால் அப்படி நின்றால் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடுவோம் என்று விஜய்க்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளதாம்.

விஜய்க்கு அறிவுரை சொன்ன டெல்லி

இன்னொரு பக்கம் விஜய்யிடம் பேசிய டெல்லி வட்டாரங்கள்.. நீங்கள் ஒரே நேரத்தில் இரண்டு ஆளும் கட்சிகளை எதிர்க்க முடியாது. இங்கே பாஜக, அங்கே திமுகவை ஒரே நேரத்தில் எதிர்க்க நீங்கள் ஜெயலலிதா கிடையாது. உஷாராக இருங்கள். இப்பொது வழக்கில் வசமாக மாட்டிவிட்டீர்கள். கவனமாக இருங்கள். கோர்ட் உங்கள் மீது கோபத்தை காட்டிவிட்டது. டெல்லி சப்போர்ட் இல்லாமல் நீங்கள் தாக்கு பிடிக்க முடியாது. கவனமாக இருக்கவும்.

உங்களுக்கு தேர்தல் நேரத்திலும் எங்கள் லாபி தேவை. நீங்கள் அங்கீகாரம் பெற்ற கட்சி கிடையாது. அப்படி இருக்க.. எப்படி ஆட்சிக்கு வர நினைப்பீர்கள்.. முதலில் உங்களுக்கு ஒரே சின்னம் கிடைக்குமா? தமிழ்நாடு முழுக்க தொகுதிக்கு தொகுதி வேறு சின்னம் கொடுத்தால் என்ன செய்வீர்கள்? அதை வாங்கவும் கோர்ட்டுக்கு செல்ல நேரிடும்.. இதற்குத்தான் டெல்லி லாபி தேவைப்படும். சின்னம் கிடைக்கவில்லை என்றால் நீங்கள் அரசியலில் சின்னாபின்னம் ஆகிவிடுவீர்கள்.. மறக்க வேண்டாம் என்று விஜயிடம் டெல்லி கூறி உள்ளதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+