கிளிசரினால் வந்த அழுகை அல்ல! கரூர் செல்லும் போது விஜய் வெளியிட போகும் முக்கிய வீடியோ? தகிக்கும் தவெக
சென்னை: தவெக தலைவர் விஜய் கரூருக்கு செல்வதற்கு முன்பு ஒன்று செய்தியாளர்களை சந்தித்து ஒரு விளக்கத்தை கொடுக்க வாய்ப்பிருக்கிறது. இல்லாவிட்டால் ஒரு வீடியோவை வெளியிட்டு அதில் விளக்கங்களை பதிவு செய்யலாம் என சொல்லப்படுகிறது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ஆம் தேதி தவெக சார்பில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகிவிட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர். இந்த தகவல் அறிந்ததும் திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி, அதிமுகவின் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் களத்திற்கு சென்று மக்களுக்கு ஓடி ஓடி உதவினர்.

அது போல் சீமான், பிரேமலதா, அன்புமணி, கமல்ஹாசன் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர். ஆனால் இந்த சம்பவத்திற்கு காரணமாக சொல்லப்படும் விஜய் மட்டும் நேரில் செல்லாத நிலை உள்ளது. அவர் கரூருக்கு வராதது ஏன் என்று விமர்சனம் எழுந்துள்ளது.
விரைவில் கரூரில் விஜய்
இந்த நிலையில் விஜய் கரூர் மக்களுடன் வீடியோ காலில் பேசி வருவதாக சொல்லப்படுகிறது. அதில் "விரைந்து வந்து உங்களை சந்திப்பேன்" என விஜய் கூறியுள்ளாராம். இந்த நிலையில் விஜய் கரூர் செல்வதற்காக அனுமதி கோரி தவெக சார்பில் தமிழக டிஜிபிக்கு மெயில் அனுப்பியுள்ளனர்.
டிஜிபி சொன்னது என்ன
இது குறித்து டிஜிபி அலுவலகம் அனுப்பிய பதிலில், "விஜய் கரூர் செல்லும் தேதி, நேரம், இடம், செல்லும் வழி, நிகழ்ச்சி விவரம் ஆகிய அனைத்தையும் கரூர் மாவட்ட எஸ்.பி.க்கு வழங்க வேண்டும். விவரங்களை முழுமையாக சமர்ப்பித்த பிறகு, மாவட்ட போலீஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை செய்து பின்பு அனுமதி குறித்து முடிவு எடுக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்யாறு பாலு தனது யூடியூப் சேனலில் கூறியிருப்பதாவது: கரூர் சம்பவம் நடந்ததிலிருந்தே விஜய் சிறிது அச்சத்துடனேயே இருந்தார். தன்னை அந்த மக்கள் எப்படி ஏற்பார்கள் என்று யோசனையில் இருந்தார்.
வீடியோ காலில் விஜய்
அதே நேரம் விஜய், வீடியோ காலில் கரூர் மக்களிடம் பேசிய போது யாருமே, "உங்களால்தான் நடந்தது, இப்போது ஏன் பேசுகிறீர்கள்" என்று கேட்கவில்லையாம். மாறாக, விஜய், தனக்கு கவலையாக இருக்கிறது என தெரிவித்ததற்கு கூட "நீங்கள் தைரியமாக இருங்க, நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்" என்றனர்.
ஆறுதல் சொன்ன கரூர் மக்கள்
அதாவது கரூர் மக்களுக்கு விஜய் ஆறுதல் சொல்ல போய் அவர்கள்தான் விஜய்க்கு ஆறுதல் சொன்னார்களாம். அது போல் தான் நம்பிய இரண்டாம் கட்ட தலைவர்கள் எல்லாம் தலைமறைவாக இருப்பதும் விஜய்க்கு பெரும் கவலையாகிவிட்டதாம்.
நடுக்கடலில் புஸ்ஸி
புஸ்ஸி ஆனந்த் நடுக்கடலில் கப்பலில் பயணம் செய்துக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள். அவர் விரைவில் போலீஸிடம் அப்ரூவர் ஆக போகிறாராம். அவர் அப்ரூவர் ஆக இதில் என்ன இருக்கிறது என நீங்கள் கேட்கலாம். விஜய் கரூரில் பேசிக் கொண்டிருந்த போது நிறைய பேர் மயங்கி விழுந்த போது, விஜய் கீழே இறங்கி அங்கு புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தியதாக சொல்லப்படுகிறது.
புஸ்ஸி ஆனந்த் எங்கே
எனவே அங்கு நடந்தது என்ன என்பது புஸ்ஸி ஆனந்திற்கு தெரியும். எனவே அவர் அப்ரூவர் ஆக வாய்ப்பிருப்பதாக சொல்லப்பபடுகிறது. அது போல் விஜய் வீடியோ காலில் பலரிடம் அழுதாராம். இது கிளிசரின் போட்டு வந்த அழுகை இல்லை. ஆத்மார்த்தமாக ஒரு உயிரிழப்புக்காக விஜய் வடித்த உண்மை கண்ணீர்.
விஜய் வீடியோ
விஜய் விரைவில் கரூருக்கு செல்வார். அவர் அவ்வாறு செல்வதற்கு முன்பு பத்திரிகையாளர்களை சந்தித்து நீண்ட நெடிய விளக்கமளிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இல்லாவிட்டாலும் ஒரு வீடியோவை வெளியிட்டு அதில் விஜய் நிறைய விஷயங்களை தெளிவுப்படுத்துவார் என சொல்லப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications