இறங்கிட்டாரு விஜய்.. CAA போன்ற எந்த பிளவுவாத சட்டத்தையும் ஏற்க முடியாது.. தவெக சரவெடி!
சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படுவதற்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பிளவுவாத அரசியலை முன்னிறுத்தும் எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல என விஜய் தெரிவித்துள்ளார்.
2019 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகளை மத்திய அரசு இன்று வெளியிட்டது. மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் சிஏஏ சட்ட அறிவிக்கையை மத்திய பாஜக அரசு வெளியிட்டது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

2019ஆம் ஆண்டில் சிஏஏ சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான போராட்டங்கள் நடைபெற்றன். கொரோனா தொற்று காரணமாக போராட்டங்கள் ஓய்ந்திருந்தன. சட்டம் நிறைவேற்றப்பட்டு 4 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில், அதனை மத்திய பாஜக அரசு அமல்படுத்தியுள்ளது. இதனால், மீண்டும் நாடு முழுவதும் கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
சிஏஏ சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்றும், சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் என்றும் பல்வேறு கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இந்நிலையில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், சிஏஏ சட்டம் அமலுக்கு எதிராக எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படும் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் (Citizenship Amendment Act 2019) போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் இந்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என ஆட்சியாளர்கள் உறுதியளிக்க வேண்டும்" என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
-
விஜய் - ராகுல் சந்திப்பு நடக்காமல் போனதற்கான உண்மைக் காரணம் என்ன? அதிர்ச்சி தரும் பின்னணி -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
முதல்வர் விஜய்.. பதவியேற்ற 20 நாட்களில் 6 பெரிய சறுக்கல்கள்.. சொதப்பல் மேல் சொதப்பல்! -
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
விஜய் வீட்டுக்கு பக்கத்தில் வீடு வாங்கணும்! பனையூரை வட்டமடிக்கும் ரியல் எஸ்டேட் முதலைகள்! என்ன விலை? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல்












Click it and Unblock the Notifications