விஜய்க்கு ஜெ.தீபா முழு சப்போர்ட்! அதிமுக ஓட்டு மட்டும் இல்ல.. எல்லா கட்சி ஓட்டையும் பிரிப்பாராம்!
சென்னை: தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு ஆதரவாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா பேசியுள்ளார். விஜய், அதிமுக வாக்குகளை பிரிப்பதோடு மட்டுமல்லாமல் எல்லா கட்சிகளின் ஓட்டுகளையும் பிரிப்பார் என்று ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய்யின் சமீபத்திய மேடை பேச்சுகளை 10 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா பேசியவற்றோடு ஒப்பிட்டு, "இன்றைய விஜய்யின் மேடை பேச்சுகள் எல்லாம் 10 ஆண்டுகளுக்கு முன் ஜெயலலிதா பேசியது தான்" என்று ஜெ. தீபா கூறியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான நேற்று, சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தில் அவரது அண்ணன் மகள் ஜெ. தீபா ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரைத்தொடர்ந்து பழம்பெரும் நடிகை சச்சு, காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி திருச்சி வேலுச்சாமி, ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சிவனாண்டி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜெ.தீபா, "எடப்பாடி பழனிசாமியை பலமுறை சந்திக்க முயன்றும் அனுமதி கிடைக்கவில்லை. ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க முயன்றபோதும் அவர் மதிக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். என்னை சந்திப்பதை தவிர்ப்பது போல தெரிகிறது. என்னை ஒதுக்க அவர் யார்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமியோடு கூட்டணி வைக்கவில்லை. என்டிஏவோடு தான் கூட்டணி வைத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி கிரீன் சிக்னல் கொடுத்ததால் தான் கூட்டணியில் இடம் பிடித்துள்ளார் டிடிவி தினகரன். என்டிஏ கூட்டணி வெற்றி பெற ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை. இவர்களை கண்டு மக்கள் வெறுத்துப் போய்விட்டார்கள். சட்டசபை, நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுக படுதோல்வியை சந்தித்தது.
என்னுடைய ஆதரவு தமிழ்நாட்டு மக்களுக்கு தான். மக்கள் யாரை தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்களுக்கு என்னுடைய ஆதரவு. விஜய் அரசியலுக்கு வந்துள்ளதை வரவேற்கிறேன். அதிமுகவை விஜய் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை என்பது நியாயமான ஒன்று தான். தற்போது மேடைகளில் தவெக தலைவர் விஜய் பேச்சுகள் எல்லாம் 10 ஆண்டுகளுக்கு முன் ஜெயலலிதா பேசியது தான். தவெக தலைவர் விஜய் அதிமுக ஓட்டை பிரிப்பதோடு மட்டுமல்லாமல் எல்லா கட்சியினர் ஓட்டையும் பிரிப்பார்.
தேர்தல் முடிந்த பிறகு அதிமுக இருந்தால் சந்தோஷம். பங்காளிகள் உரிமை கோரும் சொத்து யாருடையது என்பது என்பது பிரச்சினை. அதிமுக தொண்டர்களுக்கு சொந்தமானது. அப்போது இருந்த அதிமுக போல முழு வீச்சில் தற்போது இல்லை. சசிகலா புது கட்சி ஆரம்பிக்கட்டும் அதற்காக காத்திருக்கிறேன். பார்க்கலாம். நான் அரசியலில் தான் இருக்கிறேன். எடப்பாடி பழனிசாமியை சந்திக்க பலமுறை முயன்றுள்ளேன். ஆனால் சந்திக்க அனுமதியே கிடைக்கவில்லை. ஜெயலலிதா வீட்டில் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு எடப்பாடி பழனிசாமியை அழைக்க அவரை சந்திக்க முயன்றோம்.
தேர்தல் முடிந்த பிறகு அதிமுக இருந்தால் சந்தோஷம். பங்காளிகள் உரிமை கோரும் சொத்து யாருடையது என்பது என்பது பிரச்சனை. அதிமுக தொண்டர்களுக்கு சொந்தமானது. அப்போது இருந்த அதிமுக போல முழு வீச்சில் தற்போது இல்லை. நான் அரசியலில் தான் இருக்கிறேன்" என்று அவர் கூறினார்.
இந்த பேட்டி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா வாரிசாக தீபா, அதிமுக தலைமை மீது அதிருப்தி தெரிவித்துள்ள அதேசமயத்தில், விஜய்க்கு ஆதரவாகவும், தவெகவின் வளர்ச்சியை அங்கீகரிக்கும் வகையிலும் பேசியுள்ளார் ஜெ.தீபா. அண்மையில் புதுக் கட்சி தொடங்கிய பண்ருட்டி ராமச்சந்திரன் விஜய்க்கு ஆதரவு தெரிவித்த நிலையில், ஜெ.தீபாவும் தற்போது விஜய்க்கு ஆதரவாகப் பேசி இருக்கிறார்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி












Click it and Unblock the Notifications