நான் ரெடி தான் வரவா? கள அரசியலுக்கு வரும் தவெக விஜய்! முதல் போராட்டமே இங்கே தானா? அதிரடி அறிவிப்பு!
சென்னை: தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் ஒர்க் ஃப்ரம் ஹோம் அரசியல் செய்வதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. இந்த நிலையில் அரசியலுக்கு வந்த பிறகு முதன் முறையாக மக்கள் போராட்டத்தில் கலந்து கொள்கிறார் விஜய். இதற்காக அனுமதி கேட்டு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக்கழகம் கடிதம் கொடுத்திருக்கிறது.
தமிழகத்தில் சர்வதேச விமான நிலையம் மீனம்பாக்கத்தில் செயல்பட்டு வருகின்றது .அதை விரிவாக்கம் செய்வதற்கு உண்டான இடவசதிகள் இல்லாத காரணத்தினால் புதிய விமான நிலையம் அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில் தமிழக அரசு சார்பில் இரண்டாவது புதிய சர்வதேச விமான நிலையம் தொடங்குவதற்கு செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நான்கு இடங்களை பரிந்துரை செய்தனர்.
பரந்தூர் விமான நிலையம்:
இதில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட பரந்தூரில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படவுள்ளதாக மத்திய மாநில அரசுகள் தெரிவித்துள்ளது.மேலும் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்க பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுமார் 12 கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளது.
மக்கள் போராட்டம்:
குறிப்பாக பரந்தூர், ஏகனாபுரம் , அக்கமாபுரம், மேலேரி, வளத்தூர், தண்டலம் , நாகப்பட்டு, நெல்வாய், மகா தேவி மங்கலம், உள்ளிட்ட 12 கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளையும் நீர்நிலை பகுதிகளையும் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏகனாபுரம் கிராமப் பகுதிகளில் உள்ள மக்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்கின்றனர்.
விமான நிலையத்துக்கு எதிர்ப்பு:
இந்த காரணத்தை முன்வைத்து புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள வசதி போல், மாற்று இடம் அளித்தாலும் எங்களுக்கு அமையாது என கூறி எங்கள் பகுதியில் உள்ள குடியிருப்புகளையும் நிலப் பகுதிகளையும் எடுப்பதை தவிர்த்து விட்டு , தமிழக அரசு வேறு பகுதிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என கூறுகின்றனர். ஏகனாபுரம் கிராமத்தைப் போல் அதனைச் சுற்றியுள்ள ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு விதமான ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.
தவெக விஜய்:
இந்த நிலையில் தான் பரந்தூர் மக்களை சந்திக்க அனுமதி கோரி தமிழக வெற்றி கழகம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு விஜய் முதல் மாநில மாநாடு மூலம் அரசியலில் குதித்தார். அதற்கு பிறகு பொது நிகழ்ச்சிகள் எதிலும் விஜய் கலந்து கொள்ளவில்லை. புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் மட்டும் கலந்து கொண்டார்.
ஒர்க் ஃப்ரம் ஹோம் அரசியல்:
அதே நேரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பனையூருக்கு வரவழைத்து விஜய் நிவாரண உதவி வழங்கினார். அது பலத்த விமர்சனங்களை சந்தித்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திக்காமல் தனது அலுவலகத்திற்கு வரவழைத்து விஜய் நிவாரணம் வழங்கியது ஒர்க் ஃப்ரம் ஹோம் அரசியல் என விமர்சித்தனர்.
தமிழக வெற்றிக் கழகம்:
தொடர்ந்து அரசியல் தலைவர்களின் நினைவு நாள், பிறந்த நாள் உள்ளிட்டவற்றுக்கு கட்சி அலுவலகத்தில் புகைப்படத்திற்கு விஜய் மரியாதை செலுத்தியதும் விமர்சனங்களை பெற்றது. விஜய் பொதுவெளிக்கு வந்தால் அதிக அளவில் கூட்டம் திரளும் என அவரது கட்சி நிர்வாகிகள் கூறினாலும் களத்திற்கே சென்று மக்களை சந்திக்காமல் அரசியல் செய்வது எப்படி? தேர்தல் நேரத்தில் பிரச்சாரத்திற்கு செல்லாமல் வீட்டில் இருந்தே விஜய் அரசியல் செய்வாரா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
பரந்தூரில் விஜய்:
இந்த நிலையில் தான் கட்சி ஆரம்பித்த பிறகு முதன்முறையாக மக்களை சந்திக்கிறார் விஜய். பரந்தூரில் ஜனவரி 19 மற்றும் இருபதாம் தேதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை சந்திக்க கோரி அனுமதி கேட்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடிதம் கொடுத்திருக்கின்றனர். இதன் மூலம் முதன்முறையாக கள அரசியலுக்கு திரும்புகிறார் விஜய்.
-
விஜய் அரசை தாண்டி.. பரந்தூர் விமான நிலையத்துக்கு புதிய சிக்கல்.. ஆந்திரா மூலம் வந்த புது பிரச்சனை! -
தவெக வெற்றியைத் தொடர்ந்து.. தேசிய அளவில் காங்கிரஸுக்கு வியூகம் வகுக்கிறார் ஜான் ஆரோக்கியசாமி! -
தமிழக அரசியலில் அடுத்த அதிரடி! 5 தொகுதிகளுக்கு ஆகஸ்டில் இடைத்தேர்தல்? ஜூலை கடைசியில் தேதி அறிவிப்பு -
ஸ்ரீவைகுண்டம் கொடூரம்: “யார் அந்த மேலிடம்? முதல்வரை தாண்டிய பவர் சென்டரா?" விஜய்க்கு எடப்பாடி கேள்வி -
தொடங்கியது இடைத்தேர்தல் ஃபீவர்.. 5 தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல்.. தேர்தல் ஆணையம் போட்ட உத்தரவு! -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
மீண்டும் டெல்லி செல்லும் விஜய்! அதுவும் 3 நாள் பயணம்.. முக்கிய அஜெண்டா என்ன? ராகுலை சந்திப்பாரா? -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு?












Click it and Unblock the Notifications