நண்பர்களுக்கு போனை போட்ட விஜய்.. குறுக்கே லைனில் வந்த பெரிய நபர்.. மிக முக்கியமான அட்வைஸ்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் தனக்கு நெருக்கமான சிலரிடம் போனில் பேசியதாக கூறப்படுகிறது. இதில் விஜய் தனது வருத்தத்தை பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது.
கரூர் துயர சம்பவத்துக்கு பிறகு முதல்முறையாக தவெக தலைவர் விஜய் சமீபத்தில் வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில், என் வாழ்க்கையில் இப்படியொரு வலி நிறைந்த சூழலை சந்தித்தது கிடையாது; மனசு முழுக்க வலி மட்டும்தான்; அதற்கு ஒரே காரணம் அவர்கள் என் மேல் வைத்துள்ள அன்பும் பாசமும் தான்; அதற்கு நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன். எங்களோட வலிகளையும், நிலைமையையும் புரிந்துகொண்டு எங்களுக்காக பேசுன அரசியல் கட்சித் தலைவர்களுக்கு நன்றி.

5 மாவட்டங்களில் நடைபெறாத சம்பவம் கரூரில் மட்டும் எப்படி நடைபெற்றது. மக்களுக்கு எல்லாமே தெரியும், மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருக்காங்க. சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியில் வரும். எங்களுக்கு தரப்பட்ட இடத்தில் நாங்க பேசிக்கொண்டு இருந்தோம் அதை தாண்டி எதையும் செய்யவில்லை. சிம் சார் எதாவது பழி வாங்க வேண்டிய எண்ணம் இருந்தால் என்னை என்னவேண்டுமானாலும் செய்யுங்கள், என்று குறிப்பிட்டு உள்ளார்.
போனில் பேசிய விஜய்
இந்த நிலையில்தான் விஜய் தனக்கு நெருக்கமான சிலரிடம் போனில் பேசியதாக கூறப்படுகிறது. இதில் விஜய் தனது வருத்தத்தை பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது. அதில், நாம் போட்ட வீடியோ நிறைய பேர் பார்த்து உள்ளனர். நன்றாக ரீச் ஆகி உள்ளது . ஆனால் பலர் இதை கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள். பலர் .. நான் வருத்தம் தெரிவிக்கவில்லை என்று நினைக்கிறார்கள்.
கோர்ட் கேஸ் நடக்கும் போது வருத்தம் தெரிவிக்க கூடாது என்று அறிவுரை எனக்கு வழங்கப்பட்டது. அதன் காரணமாகவே இந்த முடிவு எடுத்தேன். அதன் காரணமாகவே அப்படி பேசினேன். மற்றபடி எனக்கு வருத்தம் இல்லாமல் இல்லை. அந்த நாளில் இருந்து வருத்தமாகவே இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களை சென்று பார்க்க வேண்டும். நிலைமை சரியானதும் சத்தமின்றி சென்று சந்திக்க வேண்டும்.
விஜயின் திட்டம்
நான் முதல்வரிடம் சவால் விடுத்ததை பலர் விரும்பவில்லை. எனக்கு கொடுக்கப்பட்ட அறிவுரைகள் அடிப்படையிலேயே அப்படி குறிப்பிட்டேன். நான் யோசித்து இருக்க வேண்டும் என்று விஜய் பேசி இருக்கிறாராம். இதையடுத்து விஜயின் லைனுக்கு வந்த முக்கியமான நபர் ஒருவர்.. நீங்கள் பேசியது சரியாக திட்டமிடப்படவில்லை விஜய். நீங்கள் பேசிய விஷயமும், பேசிய விதமும் சரியாக இல்லை. யோசித்து திட்டமிட்டு பேசி இருக்கலாம்.
உங்களுக்கு அறிவுரை வழங்குபவர்கள் சரி இல்லை. அதனால்தான் அப்படி நடந்துவிட்டது. உங்களுக்கு அறிவுரை வழங்குபவர்களை மாற்றுங்கள். இல்லையென்றால் உங்களுக்குத்தான் சிக்கல் என்று அந்த நபர் போனில் அறிவுரை வழங்கி உள்ளாராம்.
இந்த இக்கட்டான நேரத்தில் பலர் தன்னுடன் இல்லை என்று விஜய் அதிருப்தியில் இருக்கிறாராம். ஏனென்றால்.. புஸ்ஸி ஆனந்த் தலைமறைவாகி உள்ளார். ஜான், அருண் தலைமறைவாகி உள்ளனர். இன்னொரு பக்கம் ஆதவ் அர்ஜுனா தன்னை காத்துக்கொள்ள டெல்லி சென்றுவிட்டார். இதனால் விஜய் கொஞ்சம் அப்செட் ஆகி உள்ளாராம். தன்னுடன் யாரும் இல்லை என்ற கடுப்பில் விஜய் இருக்கிறாராம்.












Click it and Unblock the Notifications