எங்கே போனார் விஜய்.. தவெக 2 ஆம் கட்ட வேட்பாளர் நேர்காணலிலும் ஆப்சென்ட்
சென்னை: தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுகவில் ஏற்கனவே வேட்பாளர் நேர்காணல் முடிந்துவிட்டது. தவெகவில் ஏற்கனவே முதல் கட்ட வேட்பாளர் நேர்காணல் நடந்த நிலையில், இன்று இரண்டாம் கட்ட நேர்காணல் நடைபெற்றது இந்த நிகழ்விலும் விஜய் கலந்து கொள்ளவில்லை.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டன. பாஜக தரப்பில் தவெக விஜய்யை தங்கள் கூட்டணியில் இழுக்க பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார்கள்.

தவெக இரண்டாம் கட்ட நேர்காணல்
ஆனால் தவெக தரப்பில் அதிமுக - பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இதனால் சட்டமன்ற தேர்தலில் தவெக தனித்து போட்டியிடும் சூழல் நிலவுகிறது. தவெகவில் விருப்ப மனு அளித்தவர்களுக்கு முதல்கட்ட நேர்காணல் கடந்த மார்ச் 10 ஆம் தேதி பனையூர் தவெக அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு நேர்காணல் செய்தார்.
சுமார் 60க்கும் மேற்பட்ட நிர்வாகிகளிடம் விஜய் நேர்காணல் செய்தார்.து, எல்லாவற்றையும் வந்துவிட்டேன். இனி எனக்கு எல்லாமே அரசியல் தான் என்று விஜய் உருக்கமாக பேசியதாக தகவல் வெளியானது. புதுச்சேரி வேட்பாளர்கள் தொடர்பாக நேற்று புஸ்ஸி ஆனந்த் மற்றும் செங்கோட்டையன் நேர்காணல் செய்தனர். அதில் விஜய் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் தவெக இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் நேர்காணல் பனையூரில் இன்று நடைபெற்றது.
விஜய் ஆப்சென்ட்
தவெக வேட்பாளர் தேர்வு செய்யும் பொறுப்பு புஸ்ஸி ஆனந்த் தலைமையிலான குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. தவெக இரண்டாம் கட்ட வேட்பாளர் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. தவெக இரண்டாம் கட்ட வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல் நடைபெற்நறு வருகிறது. இதில் சுமார் 30க்கும் மேற்பட்ட தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்
அவர்களிடம் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், நிர்மல் குமார், அருண்ராஜ் உள்ளிட்டோர் நேர்காணல் செய்கின்றனர். இன்றைய நிகழ்விலும் விஜய் கலந்து கொள்ளவில்லை. நேற்றைய புதுச்சேரி நேர்காணலில் விஜய் கலந்து கொள்ளாததற்கு தவெகவினர் அதிருப்தி தெரிவித்திருந்தனர். இன்றைய நிகழ்விலும் அவர்கள் கலந்து கொள்ளாதது நிர்வாகிகளிடம் அப்செட்டை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுநாளும் தவெகவில் வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் விஜய் கலந்து கொள்ளவில்லை என்றால் பெரும் விமர்சத்துக்கு ஆளாவார் என கூறப்படுகிறது.
-
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
சி.வி.சண்முகத்திற்கு ஜாக்பாட்!தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி ரெடி! தவெக பேச்சுவார்த்தை? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்! -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா!












Click it and Unblock the Notifications