சினிமா டயலாக் மாதிரிலாம் பேசினாரே.. 20,000 கோட்ஸ்.. விஜய்க்கே எதிராக திரும்பிய வீடியோ.. ட்விஸ்ட்
சென்னை: கரூர் தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்காமல் நேற்று நடிகர் விஜய் வெளியிட்ட வீடியோ கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும் என்று கருதி அவர் போட்ட வீடியோ கடும் பின்னடைவை அவருக்கே ஏற்படுத்தி உள்ளது.
கரூர் துயர சம்பவத்துக்கு பிறகு முதல்முறையாக தவெக தலைவர் விஜய் வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில், என் வாழ்க்கையில் இப்படியொரு வலி நிறைந்த சூழலை சந்தித்தது கிடையாது; மனசு முழுக்க வலி மட்டும்தான்; அதற்கு ஒரே காரணம் அவர்கள் என் மேல் வைத்துள்ள அன்பும் பாசமும் தான்; அதற்கு நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன். எங்களோட வலிகளையும், நிலைமையையும் புரிந்துகொண்டு எங்களுக்காக பேசுன அரசியல் கட்சித் தலைவர்களுக்கு நன்றி.

5 மாவட்டங்களில் நடைபெறாத சம்பவம் கரூரில் மட்டும் எப்படி நடைபெற்றது. மக்களுக்கு எல்லாமே தெரியும், மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருக்காங்க. சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியில் வரும். எங்களுக்கு தரப்பட்ட இடத்தில் நாங்க பேசிக்கொண்டு இருந்தோம் அதை தாண்டி எதையும் செய்யவில்லை. சிம் சார் எதாவது பழி வாங்க வேண்டிய எண்ணம் இருந்தால் என்னை என்னவேண்டுமானாலும் செய்யுங்கள், என்று குறிப்பிட்டு உள்ளார்.
விஜயின் பிளான்
இந்த வீடியோ மூலம் தனக்கு நிறைய ஆதரவாக போஸ்ட் வரும், அரசியல் தனக்கு ஆதரவாக திரும்பும், மக்கள் தனக்கு ஆதரவாக போஸ்ட் செய்வார்கள் என்றெல்லாம் விஜய் நினைத்தார். அரசுக்கு எதிராக கடுமையாக கேள்விகளை எழுப்புவார்கள். கரூர் திமுகவை கேள்வி எழுப்புவார்கள் என்றெல்லாம் விஜய் நினைத்திருப்பார்.
நாம் சினிமா பாணியில் பேசிவிட்டோம்.. இனி இது தீ போல திமுகவிற்கு எதிராக பரவும். அரசுக்கு பெரிய நெருக்கடியை கொடுக்கும். நாம் பேசும் போது கரூர் என்று கூறி விட்டு முறைத்து பார்த்து உள்ளோம்.. அதுவே பெரிய அளவில் பேசப்படும். திமுகவிற்கு நெருக்கடியாக மாறும் என்றெல்லாம் விஜய் நினைத்திருப்பார்.
விஜய்க்கே எதிராக திரும்பிவிட்டது
ஆனால் விஜய் போட்ட வீடியோ அவருக்கே எதிராக திரும்பிவிட்டது. விஜய்யை கடுமையாக கண்டித்து, கடுமையாக விமர்சனம் செய்து அவரின் ரசிகர்களே போஸ்ட் செய்து வருகின்றனர். இப்படி ஒரு நபருக்கா ரசிகராக இருந்தோம் என்று அவரை கோட் செய்து போஸ்ட் செய்து வருகின்றனர் . கிட்டத்தட்ட இதுவரை அவரின் போஸ்டை 20 ஆயிரம் பேர் கோட் மட்டும் செய்துள்ளனர்.
1. விஜய் இந்த நிகழ்விற்கு ஒரு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. தன்னை நியாயப்படுத்தவே பார்க்கிறார்.
2. ரசிகர்களை கட்டுப்படுத்தாமல், ரசிகர்களை அமைதிப்படுத்தாமல் சதி வேலை நடந்தது போல விஜய் பேசுகிறார்.
3. வதந்தி பரப்பும் ரசிகர்களை அமைதியாக இருக்க சொல்லாமல்.. விஜய்யே வதந்தி பரப்பிக்கொண்டு இருக்கிறார்.
4. ஸ்டாலின் தனது வீடியோவில் யாரையும் குற்றம் சொல்லாமல்.. அமைதியை கொண்டு வர வேண்டும் என்று பேசினார். அந்த முதிர்ச்சி இல்லாமல் என்னை டச் பண்ணுங்க, பனையூர் வாங்க என்றெல்லாம் பேசி விஜய் சினிமா பாணியில் சவால் விடுகிறார்.
5. இவ்வளவு பெரிய கொடூர சம்பவத்திற்கு ஒரு சின்ன வருத்தம் கூட விஜய் தெரிவிக்காமல் இருப்பது பெரிய தவறு என்று 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அவரின் போஸ்டை கோட் செய்து வருகின்றனர்.
-
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: மீண்டும் சூடுபிடிக்கும் சிபிஐ விசாரணை.. 10 போலீசாருக்கு சம்மன் -
சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு அப்போ பவரே இல்லையா.. வழக்கு போட முடியாது! விசாரிக்கவும் முடியாதாம்! -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
அனைத்து டெண்டர்களும் நிறுத்தம்.. புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட அறநிலையத்துறை முடிவு!












Click it and Unblock the Notifications