ஜெயலலிதாவிற்கு கொடநாடு, விஜய்க்கு பனையூரா? பத்திரிகையாளர் கோவி லெனின் நேர்காணல்.. வீடியோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டசபைத் தேர்தலை இலக்காக கொண்டு தவெக தலைவர் விஜய் செயல்பட்டு வருகிறார். கரூர் சம்பவத்திற்கு பின் 38 நாட்களுக்கு கழித்து தவெக சிறப்பு பொதுக்குழுவில் பங்கேற்ற விஜய், மீண்டும் ஒரு வாரமான பனையூரிலேயே இருக்கிறார். அதேபோல் திமுக எதிர்ப்பை மட்டுமே மையமாக வைத்து விஜய் செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் பத்திரிகையாளர் கோவி லெனின் விஜய்யின் அரசியல் தொடர்பாக ஒன் இந்தியா யூடியூப் சேனலுக்கு நேர்காணல் அளித்துள்ளார். அதில் கோவி லெனின் பேசுகையில், ஆதவ் அர்ஜுனா கொள்கை ரீதியிலான அரசியல்வாதி கிடையாது. சந்தடி சாக்கில் 10 ஆண்டுகளாக திமுகவுக்கு உழைத்தேன் என்கிறார். திமுகவின் கடைக்கோடி தொண்டர் உழைக்காத உழைப்பா..

TVK vs DMK

ஆதவ் அர்ஜுனா ஒரு வியாபாரி.. அவர் எதிர்பார்த்த வியாபாரம் திமுகவில் நடக்கவில்லை. உடனடியாக விசிகவுக்கு சென்றார். கூட்டணியை உடைக்கும் நோக்கில் ஆதவ் அர்ஜுனா செயல்பட்டார். திமுக - விசிக கூட்டணியால் தலித் வாக்குகள் சிறப்பகவே அறுவடை செய்யப்பட்டது. திருமாவளவன் ஒரு சித்தாந்த பார்வை கொண்டவராக இருக்கிறார்.

இந்த உறவை காலி செய்ய வேண்டும் என்றால், எதை கையில் எடுக்க வேண்டும்? ஏன் தலித் முதல்வர் வரக் கூடாது என்று கேள்வி எழுப்பினார். அதன்பின் இடைநீக்கம் செய்யப்பட்ட போதே, தவெகவுக்கு சென்றுவிட்டார். அரசியலில் தேர்தல் கணக்கு என்பது அனைவருக்கும் தெரியும். தவெகவுக்கு சென்ற பின், ஆதவ் அர்ஜுனாவின் தலித் முதல்வர் கோஷம் எங்கு போனது?

ஆதவ் அர்ஜுனா தேர்தல் களத்தில் பணியாற்றி இருக்கிறார். ஆனால் புஸ்ஸி ஆனந்த் தேர்தலில் நின்று வென்றுள்ளார். தவெக என்பது ஒரு விஜய் படத்தை போன்றது தான். அதனால் விஜய்யை பார்க்க அதிகளவில் செல்கிறார்கள். ஒரு ட்வீட்டை ஆதவ் அர்ஜுனா பதிவிட்டார். அதனை ஏன் நீக்கினார்? எந்த விஷயத்திற்கும் ஒரு பொறுப்பை ஏற்காமல் இருக்கிறார்கள். கரூர் விவகாரத்தில் எந்த விஷயத்திற்காகவாவது பொறுப்பேற்றார்களா?

இது மோசமான கோழைத்தனம்.. தவெகவிற்குள் இருக்கும் வன்மம் அந்தக் கட்சிக்கே நல்லது கிடையாது.. தவெகவிற்கு என்று தனித்துவமான கொள்கை, கோட்பாடு கிடையாது. நாங்கள் உருவாக்கிய கொள்கை என்று தவெகவிடம் ஏதாவது உண்டா? சொந்தமாக எதுவும் இல்லை.. முதலில் அண்ணாவை அவர்கள் கையில் எடுக்கவில்லை.. ஆனால் அண்ணாவை கையில் எடுக்காமல் எதுவும் பேச முடியாது என்பதால், பின்னர் அண்ணாவை பேசினார்கள்.

எந்த செயல் திட்டமாவது புதிதாக இருக்கிறதா? சினிமாவில் ஒரு வெற்றிக்கான ஃபார்முலாவை உருவாக்கியது போல், அரசியலிலும் ஃபார்முலாவுடன் செயல்பட்டு வருகிறார். இன்று வரை கரூர் செல்லவில்லை.. தவெகவை பொறுத்தவரை திமுகவை டிஸ்டர்ப் செய்ய வேண்டும். ஜெயலலிதா அரசியல் செய்த காலத்தில், அதிமுக வலிமையான கட்சி.. 3 முறை தமிழ்நாட்டை ஆட்சி செய்த கட்சி..

1982க்கு பின்னர் தான் அதிமுகவில் ஜெயலலிதா இணைந்தார். கட்டமைப்பு கொண்ட கட்சியில் தான் ஜெயலலிதா தலைமைக்கு சென்றார். ஜெயலலிதாவை ஏற்றுக் கொள்ள அவரின் சமூகம், சினிமா மற்றும் பெண் என்ற விஷயங்கள். ஜெயலலிதாவை போல் தம்மை மக்கள் ஏற்பார்கள் என்று விஜய் நினைத்துக் கொண்டால் எப்படி? திமுகவை பலவீனப்படுத்துவது தான் தவெகவின் நோக்கம்.

விஜய்க்கு மீடியாவின் கவனம் அதிகம் உள்ளது. அவர் சினிமாவை சேர்ந்தவர் என்பதால் நடக்கிறது. அதனால் இத்தனை நாட்களாக சினிமா பேசிக் கொண்டிருந்தவர்கள் விஜய்யுடன் சென்றுவிட்டார்கள். ஒரு கட்டத்தில் பலூன் போல் வெடித்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+