ஒரு சீட்டுக்காக! மன்னித்துவிடுகிறோம்! தவாக வேல்முருகனை சீண்டி தவெகவினர் போஸ்டரால் பரபரப்பு!
சென்னை: தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனை மன்னித்து விடுகிறோம் என மதுரையில் தவெகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீங்கள் எப்படியும் தவெகவுடன் கூட்டணி வருவீர்கள் என்றும் பதிவிட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கடந்த 3 ஆண்டுகளாக 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் நேரில் அழைத்து விருது, பரிசு வழங்கி பாராட்டி வருகிறார்.
பொதுவாக விஜய் என்றால் சிறு குழந்தைகளுக்குக் கூட பிடிக்கும். அது போல் பள்ளி, கல்லூரி மாணவர்களும் விஜய்யின் ரசிகர்கள்தான். விஜய்யை நேரில் பார்க்க முடியாது. ஆனால் தாங்கள் எடுத்த மதிப்பெண்ணால் விஜய்யுடன் கை குலுக்கி, போட்டோ எடுக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
இதனால் மாணவ, மாணவிகளும் அவர்களது பெற்றோரும் விஜய்யை பார்த்தும் ஆரவாரம் செய்தும், விஜய்யின் ஸ்டைலை செய்தும், அவருடன் கட்டி பிடித்தும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.
விஜயை அந்த மாணவ, மாணவிகள் அண்ணன் என்ற முறையில் தொட்டு பேசுகிறார்கள். அது போல் அந்த மாணவிகளுக்கு அண்ணன் என்றால் அவர்களது பெற்றோருக்கு விஜய் மகன் முறை என்பதால் அவர்களும் சிறு குழந்தை போல் விஜய்யுடன் புகைப்படம் எடுத்து பூரிக்கிறார்கள்.
ஆனால் இதை தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் முகம் சுளிக்கும் வகையில் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். மிகவும் அநாகரீகமான பேசியிருந்தார். இதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.
வேல்முருகனை தவெகவினர், பாஜகவினர் கண்டித்து அவருடன் கூட்டணி வைக்கக் கூடாது என திமுகவிடம் கோரிக்கை விடுத்தனர். மேலும் அவரை எம்எல்ஏ பதவியிலிருந்தே நீக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
விஜய்யை கண்டித்து சேலத்தில் தவாகவினர் போஸ்டர்களை ஒட்டியிருந்தனர். இதனிடையே விஜய் நேருக்கு நேர் பேச தயாரா என வேல்முருகன் கேள்வி கேட்டிருந்தார். இதனால் தமிழக வெற்றிக் கழகம்- தமிழக வாழ்வுரிமைக் கட்சி இடையே போஸ்டர் மோதல் அதிகரித்தது.
இந்த நிலையில் மதுரையில் ஒற்றை சீட்டுக்கு கூட்டணிக்காக குவிபவரே? குருதி கொதித்தாலும் மானம் உள்ள அய்யா, எங்களுடன் கூட்டணி வருவீர்கள். மன்னித்து விடுகிறோம் என்ற வாசகங்களுடன் தவெகவினர் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
2 கிராம் தங்கத்திற்காக பெற்ற பெண் குழந்தைகளை கூத்தாடியை கட்டி பிடிக்க வைத்து முத்தம் கொடுக்க சொல்கிறார்கள் என பெற்றோரை தவாக வேல்முருகன் கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
நேர்மையாக செயல்படுங்கள்.. இல்லைன்னா தொலைச்சிடுவேன்! நகராட்சி அதிகாரிகளுக்கு விஜய் எச்சரிக்கை -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.. உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல் -
திமுக எதிர்த்த VB-GRAM திட்டத்தை.. அமல்படுத்தும் விஜய் அரசு! தமிழகத்துக்கு ₹5,000 கோடி கூடுதல் சுமை -
துடி துடித்த தூத்துக்குடி.. குடும்ப கவுரவத்துக்காக நடந்த கொடூரம்! 19 வயது இளம்பெண் ஆணவக்கொலை! -
டெல்லி தமிழ்நாடு இல்ல கேண்டீனில் தீ விபத்து.. முதல்வர் விஜய் புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பு -
எம்ஜிஆர் வழிபட்ட அதே கோவில்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் விஜய்! அந்த தங்க வாள் ரகசியம் -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
3 செய்தி சேனல்களை முடக்கி ஜனநாயகத்தின் குரலை முடக்குவதா? தவெக அரசுக்கு மத்திய அமைச்சர் கண்டனம் -
பரந்தூர் விமான நிலையம்.. களத்தில் இறங்கிய மத்திய அரசு.. விஜய்க்கு பெரும் சிக்கல்! -
தொடங்கியது இடைத்தேர்தல் ஃபீவர்.. 5 தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல்.. தேர்தல் ஆணையம் போட்ட உத்தரவு!












Click it and Unblock the Notifications