வேளச்சேரி தொகுதியில் விசில் சத்தம்.. சர்வே முடிவால் விஜய் குஷி.. திமுக அதிமுகவுக்கு ஷாக்
சென்னை: சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு சில வாரங்களே உள்ளது. ஆட்சியை தக்க வைக்க திமுக, ஆட்சியை பிடிக்க அதிமுக - பாஜக கூட்டணி மல்லு கட்டுகிறார்கள். நாம் தமிழர் மற்றும் தவெக வும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். இதுவரை இல்லாதளவுக்கு தமிழ்நாட்டில் 4 முனை போட்டி நிலவுவது அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது. நியூஸ் 7 வெளியிட்டு வரும் கருத்துக்கணிப்பில் வேளச்சேரி தொகுதியில் திமுக, அதிமுகவை விட தவெக அதிக வாக்குகள் பெறும் என கூறப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் தான் விஜய் போட்டியிடவுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி, தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

சர்வே ரிப்போர்ட்
தேர்தல் என்றாலே கூட்டணிகளுக்குள் குஸ்தி சண்டை, அரசியல் கட்சியினர் கரைவேட்டி மாறுதல் இருப்பது இயல்பு. முக்கியமாக கருத்துக் கணிப்புகளும் அதிகம் வெளியாகும். அந்த வகையில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாக தொடங்கியுள்ளன. நியூஸ் 7 தொலைக்காட்சி சில அமைப்புகளுடன் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.
தலைநகர் சென்னையில் உள்ள 16 தொகுதிகளுக்கான கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக 45.23%, அதிமுக 24.66%, தவெக 18.86%, நாம் தமிழர் 03.77%, மற்றவை 07.48% வாக்கு பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது. ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக 33.31%, அதிமுக 30.64%, தவெக 24.95%, நாம் தமிழர் 07.18%, மற்றவை 03.92% வாக்கு பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
விருகம்பாக்கம், தியாகராயநகரில் தவெக
அண்ணாநகர் தொகுதியில் திமுக 33.31%, அதிமுக 27.13%, தவெக 27.35%, நாம் தமிழர் 05.08%, மற்றவை 02.58% வாக்குகள் பெறும் என்று சொல்லியுள்ளனர். விருகம்பாக்கம் தொகுதியில் திமுக 28.27%, அதிமுக 28.44%, தவெக 34.95%, நாம் தமிழர் 05.02%, மற்றவை 03.32% வாக்குகள் பெறும் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த தொகுதியில் திமுக அதிமுவை விட தவெக அதிக வாக்குகள் வாங்கும் என்று கூறியுள்ளனர்.
சைதாப்பேட்டை தொகுதியில் திமுக 39.99%, அதிமுக 26.77%, தவெக 28.51%, நாம் தமிழர் 03.09%, மற்றவை 01.64% வாக்குகள் பெறுவார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. தியாகராய நகர் தொகுதியில் திமுக 31.62%, அதிமுக 30.37%, தவெக 32.79%, நாம் தமிழர் 03.94%, மற்றவை 01.28% வாக்குகள் பெறுவார்கள் என்று கூறியுள்ளனர். விருகம்பாக்கத்தை போல இந்த தொகுதியிலும் திமுக, அதிமுகவை விட தவெக அதிக வாக்குகள் பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
வேளச்சேரி ரிசல்டால் விஜய் ஹேப்பி
மயிலாப்பூர் தொகுதியில் திமுக 32.84%, அதிமுக 21.99%, தவெக 32.14%, நாம் தமிழர் 05.57%, மற்றவை 07.46% வாக்குகள் பெறுவார்கள் என்றும், வேளச்சேரி தொகுதியில் திமுக 27.79%, அதிமுக 27.87%, தவெக 30.06%, நாம் தமிழர் 06.26%, மற்றவை 08.02% வாக்குகள் பெறும் என்றும் கூறியுள்ளனர். இந்த தொகுதியில் தான் தவெக தலைவர் விஜய் போட்டியிடவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
விருகம்பாக்கம், தியாகராய நகர் தொகுதிகளை தொடர்ந்து சென்னையில் மூன்றாவது தொகுதியாக வேளச்சேரியில் திமுக, அதிமுகவை விட தவெக அதிக வாக்குகள் பெறுவார்கள் என்று கூறியுள்ளனர். சோழிங்கநல்லூர் தொகுதியில் திமுக 36.96%, அதிமுக 28.52%, தவெக 26.64%, நாம் தமிழர் 07.63%, மற்றவை 00.25% வாக்குகள் பெறுவார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.
இறுதியாக ஆலந்தூர் தொகுதியில் திமுக 35.91%, அதிமுக 26.67%, தவெக 25.78%, நாம் தமிழர் 05.54%, மற்றவை 06.10% வாக்குகள் பெறுவார்கள் என்று கூறியுள்ளனர். மொத்தமாக இந்த 8 தொகுதிகளில் 5 இல் திமுகவும், 3 தொகுதிகளில் தவெகவும் வெற்றி பெறும் என்றும் கூறியுள்ளனர். அதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறும் என கூறவில்லை. அதேபோல ஒரு தொகுதியில் கூட நாம் தமிழர் வாக்கு சதவீதம் 1 சதவீதத்தை தொடாது என்றும் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications