திருவிக நகரில் திடுக்கிடும் மாற்றம்! பொற்கொடி வாக்கு சேகரித்த போது தவெக பெண் செய்த செயலால் பரபரப்பு
சென்னை: திருவிக நகர் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கிற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. தவெகவில் இருந்து களத்தில் இறங்கி பணியாற்றிய பெண் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்துள்ளார். பொற்கொடி வாக்கு சேகரித்த போது இந்த சம்பவம் நடந்தது.
ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் சென்னையின் திரு.வி.க.நகர் தொகுதி இப்போது கடும் அரசியல் சுழலில் சிக்கியிருக்கிறது. தமிழக வெற்றி கழகம் (TVK) சார்பில் இயங்கி வந்த சென்னையைச் சேர்ந்த ஒரு பெண் தலைவர், தனது ஆதரவாளர்களுடன் அக்கட்சியை விட்டு வெளியேறி, தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கிற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

அந்த பெண் கூறுகையில், 25 ஆண்டுகளாக நான் விஜய்யின் ரசிகையாக இருக்கேன். 3 ஆண்டுகளாக தவெகவில் களப்பணி ஆற்றியுள்ளேன். எனக்கு பணமோ, பதவியோ முக்கியமில்லை, தன்மானம்தான் முக்கியம். எங்கள் கட்சி தலைமையிடமும் ஆதரவு இல்லை, மாவட்டச் செயலாளர் எம்.ஆர்பழனியிடமும் ஆதரவு இல்லை, புஸ்ஸி ஆனந்திடம் புகார் கொடுத்தாலும் எடுபடவில்லை, அண்ணிதான் (பொற்கொடி) ஜெயிக்கணும், அவருக்கு நாங்கள் எப்போதும் ஆதரவு கொடுப்போம். இந்த தொகுதியில் அவரை நாங்கள் ஜெயிக்க வைப்போம் என அந்த தெரிவித்தார். அப்போது ஜெய்பீம் கோஷம் அந்த பகுதி முழுவதும் ஒலித்தது.
இந்த அதிரடி நகர்வு தொகுதியில் புதிய அரசியல் சமன்பாட்டை உருவாக்கியிருக்கிறது. கொலை செய்யப்பட்ட மாநில BSP தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியான பொற்கொடி, 2024- இல் நடந்த தனது கணவரின் கொலைக்கு நீதி கேட்கும் போராட்டமாக இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் திரு.வி.க.நகர் தொகுதியில் நாமினேஷன் தாக்கல் செய்தார். VCK தலைவர் தொல். திருமாவளவன், இயக்குநர் பா. ரஞ்சித், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட பல முனைகளில் இருந்து ஆதரவு கிடைத்திருக்கிறது.
ஆனால் இந்தத் தேர்தலில் பொற்கொடிக்கு சவால்களும் இல்லாமல் இல்லை. 2021 தேர்தலில் DMK வேட்பாளர் சிவக்குமார் (தாயகம் கவி) 55,013 வாக்கு வித்தியாசத்தில் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றார் தற்போது திமுக வேட்பாளர் K.S. ரவிச்சந்திரன் இம்முறை வலுவான அணியுடன் களத்தில் இறங்கியிருக்கிறார்.
தவெக வேட்பாளரும் போட்டியில் இருக்கிறார். திரு.வி.க.நகர் தொகுதியில் குறிப்பாக பெரம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் ஆம்ஸ்ட்ராங்கின் தளமாக இருந்தமையால், பொற்கொடிக்கு அங்கு வலுவான ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொற்கொடியின் வெற்றி வியூகம் மூன்று தூண்களில் நிற்கிறது - கணவரின் கொலையில் நீதி கோரும் உணர்வலை, தலித் வாக்கு வங்கியை ஒருங்கிணைத்தல், மற்றும் பல கட்சிகளின் கூட்டணி ஆதரவு. தவெக பெண் தலைவரின் இணைப்பு அந்த வலையை இன்னும் பரப்புகிறது.
அதிமுக, வட சென்னையில் தலித் வாக்குகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் பொற்கொடியை நிறுத்தியிருக்கிறது என்பது தெளிவு. ஆனால் இந்தத் தொகுதியில் திமுகவின் நிர்வாக பலம் மறுக்க முடியாததாக இருக்கிறது. பொற்கொடிக்கு ஒவ்வொரு ஆதரவும் முக்கியம்; அதனாலேயே தவெகவிலிருந்து வெளியேறிய பெண் தலைவரின் இணைப்பு, வாக்கு பிளவை உண்டாக்கக் கூடும் என்ற கணக்கை எதிரிகளுக்கும் தர ஆரம்பித்திருக்கிறது.
வாக்குகள் மே 4 அன்று எண்ணப்படும் நிலையில், திரு.வி.க.நகரில் உருவாகும் அலை எந்தத் திசையில் சாயும் என்பது இனி கவனிக்கப்பட வேண்டிய கேள்வியாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications
