ஓட்டு போடலைல்ல.. காசை திருப்பி கொடு.. கொந்தளித்த தேனி பெண்.. இரட்டை இலைக்கு வந்த சோதனை
கொடுத்த பணத்தை திரும்ப கேட்கும் தேனி அதிமுக குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
சென்னை: ஓட்டு போட சொல்லி தந்த பணத்தை அதிமுகவினர் திரும்பி வாங்கிட்டாங்களே என்று புலம்பிய பாக்கியம் என்ற பெண்ணின் வீடியோ வைரலாகியுள்ளது.
தனது மகனை வெற்றி பெற வைப்பதற்காக ஓபிஎஸ், பணத்தை வாரி வாரி இறைக்கிறார் என்றும், தெருவெல்லாம் பணம் சிதறிக்கிடக்கிறது என்றும் ஏற்கனவே அமமுக தங்கதமிழ்செல்வன் கூறியிருந்தார்.
அதேபோல, பணப்பட்டுவாடா செய்தபோது கையும் களவுமாக பிடிக்கப்பட்டார்கள் என்றும் அவர்களை விரட்டி பிடிக்க முயன்றதில் துப்பாக்கி சூடு நடந்ததாகவும் பதிலுக்கு அதிமுகவினர் அமமுகவினர் மீது சாடினார்கள்.
|
அதிமுக
இப்படி ஒருவருக்கொருவர் சேற்றை வாரி வாரிபூசிக் கொண்ட நிலையில், தேனியில் நேற்றில் இருந்து ஒரு விஷயம் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.

வாக்களிக்கவில்லை
அதிமுகவிற்கு யாரும் வாக்களிக்கவில்லை என்றும், அதனால் பணத்தை திரும்ப தரும்படி அதிமுகவினர் மக்களிடம் கேட்டு வருவதாகவும் சொல்கிறார்கள். இது வெறும் பேச்சாக மட்டுமில்லாமல், புகாராக அதுவும் பேட்டியாக வெடித்துள்ளது.

புலம்பிய பாக்கியம்
பாக்கியம் என்ற பெண் செய்தியாளர்களை அழைத்து "ஓட்டு போடவில்லை என்று கூறி அதிமுகவினர் எனக்கு கொடுத்த 1000 ரூபாயை திரும்ப கேட்கிறார்கள், கேட்டபடியே நானும் பணத்த திரும்ப தந்துவிட்டேன்" என்று புலம்பி தள்ளினார். கொடுத்த பணத்தை வாங்கி கொண்ட கோபமோ என்னவோ, பாக்கியம் புலம்பி தள்ளியதுதான் இன்றைக்கு ஹைலைட்!!

ஊக்கத்தொகை
இதுதொடர்பான வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வீடியோவில் அப்பெண், அதில், "வாக்கு சேகரிப்பின்பொழுது ஊக்கத்தொகை கொடுத்த தேனி அதிமுகவினர் திரும்பவும் அந்த தொகையை 'கேட்டு பெற்ற' உயரிய அரசியல் சம்பவம். வாழ்க ஜனநாயகம்! வாழ்க அதிமுகவின் 'பெருந்தன்மை'! நல்ல கோவம் பா இரட்டை இலை பாட்டிக்கு" என்று கிண்டல் அடித்துள்ளார் ஒரு பெண்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications