பெரம்பூர் நகைக்கடையில் 9 கிலோ தங்க நகை கொள்ளை..பெங்களூருவில் 2 பேரை தட்டித்தூக்கிய தனிப்படை போலீஸ்
பெரம்பூரில் ஷட்டரை உடைத்து 9 கிலோ தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக 2 பேரை பெங்களூருவில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை: பெரம்பூர் நகைக்கடையில் 9 கிலோ தங்கத்தை கொள்ளையடித்த 2 பேர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டனர். நகைக்கடையின் ஷட்டரை வெல்டிங் மூலமாக உடைத்து தங்கம், வைரத்தை கொள்ளையடித்தவர்களை தனிப்படை பிடித்தது. பல நாட்களாக குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் இரண்டு பேரை தனிப்படை போலீஸ் கைது செய்துள்ளது.
சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் வசித்து வரும் ஸ்ரீதர் என்பவருக்கு 2 மாடிகள் கொண்ட கட்டடம் உள்ளது. இதில் 2வது தளத்தில் ஸ்ரீதர் தனது குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் முதல் தளத்தில் நகைக்கடை நடத்தி வருகிறார்.
கடந்த மாதம் 9ஆம் தேதி இரவு வியாபாரம் முடிந்த பிறகு ஸ்ரீதர் தனது நகைக்கடையை ஊழியர்கள் பூட்டிவிட்டு சென்றனர். 10ஆம் காலை 9 மணியளவில் ஸ்ரீதர் கடையை திறப்பதற்காக வந்தார். அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது

நகைக்கடையின் முன்பக்க ஷட்டரில் ஒரு ஆள் உள்ளே சென்று வருவதற்கு வசதியாக பெரிய ஓட்டை போடப்பட்டு இருந்தது. வெல்டிங் மெஷின் அல்லது கியாஸ் கட்டர் கொண்டு மர்மகும்பல் கொள்ளையடிப்பதற்காக ஷட்டரில் ஓட்டை போட்டது தெரியவந்தது. இதனால் பதற்றமடைந்த ஸ்ரீதர் கடைக்குள் சென்று பார்த்த போது அனைத்து பொருட்களும் சிதறி கிடந்தன.
லாக்கர் ரூம் கதவை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்து தங்கம், வைர நகைகளை அள்ளிச்சென்றது தெரியவந்தது. கடையில் இருந்த சிசிடிவி கேமரா, ஹார்ட் டிஸ்கையும் மர்மநபர்கள் தூக்கி சென்று விட்டனர். 9 கிலோ நகைகளை கொள்ளையடித்து சென்றது விசாரணையில் தெரியவந்தது.

கொள்ளை சம்பவம் குறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்தை சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய 3 உதவி ஆணையர்கள் தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் பெரம்பூர் நகைக்கடையில் 9 கிலோ தங்கத்தை கொள்ளையடித்த 2 பேர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டனர். பல நாட்களாக குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் இரண்டு பேரை தனிப்படை போலீஸ் கைது செய்துள்ளது.
-
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications