ஒரே நாளில்.. ஒரே இடத்தில்.. ஒரே துணியில் அண்ணன்- தம்பி தூக்கிட்டு தற்கொலை.. அதிர்ச்சியில் காசிமேடு!
அண்ணன், தம்பி இருவரும் தற்கொலை செய்து கொண்டனர்
சென்னை: ஒரே நாளில்.. ஒரே இடத்தில்.. ஒரே துணியில் அண்ணன் - தம்பி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவத்தினால் காசிமேடு மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்தவர்கள் இருதயராஜ் - ஆரோக்ய ஆகாஷ்.. இருவரும் அண்ணன் - தம்பிகள்.. இருதயராஜுக்கு 29 வயதாகிறது.. ஆகாஷுக்கு 24 வயதாகிறது!

இருதயராஜ் பிடெக் படித்துள்ளார்.. ஆகாஷ் பிஇ படித்துள்ளார்.. இருவரும் ஒரே வீட்டில் குடியிருந்தனர்.. 3வது மாடியில் பெற்றோர் குடியிருக்க.. 2வது மாடியில் இருதயராஜ், 3-வது மாடியில் ஆகாஷ் குடியிருந்தனர். அண்ணன் - தம்பிகளாக இருந்தாலும் இருவரும் ரொம்பவும் நெருக்கமாம்.. நண்பர்கள் போலவே பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில், ஆகாஷ் தன்னுடைய நண்பன் ஒருவருக்கு போன் செய்து, "ஹாய் ஃப்ரெண்ட், நான் இந்த உலகத்தைவிட்டே செல்கிறேன். என் குடும்பத்தை நீதாண்டா பார்த்துக்கணும்" என்று சொல்லி உள்ளார்.. இதை கேட்டு அதிர்ந்த அந்த நண்பர், உடனே ஆகாஷுக்கு போன் செய்துள்ளார்.. ஆனால் செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்தது.. அதனால் ஆகாஷின் அண்ணன் இருதயராஜுக்கு போன் செய்து சொன்னார்.. அப்போது இருதயராஜ் அவரது வீட்டில்தான் இருந்தார்.
இதனால் பதறி போன அவரும், உடனடியாக ஆகாஷ் அறைக்கு ஓடினார்... அதற்குள் ஆகாஷ் தூக்கில் தொங்கியபடி இருந்ததை கண்டு கதறினார்.. அவரை உடனடியாக அவரை மீட்டு பக்கத்தில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றார்.. ஆனால் ஆகாஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர்.
ஆஸ்பத்திரியிலேயே கதறி கதறி அழுதார் ஆரோக்கியராஜ்.. தம்பியின் சடலத்தையே வெறித்து பார்த்து கொண்டிருந்தார்.. பிறகு விஷயத்தை பெற்றோரிடம் சொல்ல வீட்டுக்கு வந்தார்.. ஆனால் வீட்டிற்கு வந்தவர் பெற்றோரிடம் போகாமல் நேராக 3-வது மாடிக்கு சென்றார்... ஆகாஷ் தூக்கு போட்டுக் கொண்ட ஃபேனை ரொம்ப நேரமாக பார்த்து நின்றார்.. பிறகு அதே ஃபேனில்.. அதே துணியில்... தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ரொம்ப நேரமாக மகனை காணவில்லை என்று தேடியபோதுதான் தூக்கில் தொங்கியது வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியவந்தது. தகவலறிந்து காசிமேடு போலீசார் விரைந்து வந்து விசாரணையை ஆரம்பித்தனர்.
ஆகாஷ் ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார்.. ஆனாலும் போதைக்கு அடிமையாகிவிட்டார்.. அதனால் சரியாக வேலைக்கும் போகாமல் வீட்டிலேயே இருந்ததால், விரக்தியின் உச்சத்துக்கு போய் தற்கொலையே செய்து கொண்டுள்ளார். தம்பி மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்த இருதயராஜ், இதை தாங்கி கொள்ள முடியாமல்தான், அதே இடத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
படித்த பட்டதாரிகள் இப்படி ஒரே வீட்டில்.. ஒரே துணியில் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவத்தினால் காசிமேடு பெரும் அதிர்ச்சியில் உள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications