Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூமில் இருந்த பெண் டாக்டர்கள்.. டக்கென நுழைந்த காமுகர்கள்.. ஷாக்கில் உறைந்த தமிழகம்.. என்ன நடந்தது?

டாக்டர்களுக்கு பாலியல் தொல்லை தந்த 2 டாக்டர்கள் கைதானார்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவை மாணவியின் தற்கொலை சம்பவத்துக்கு பிறகு தமிழக மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.. பாலியல் வன்கொடுமை மற்றும் சீண்டல்களில் ஈடுபடும் நபர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.. இப்படிப்பட்ட சூழலில் மீண்டும் ஒரு அக்கிரமம் நடந்துள்ளது சென்னையில்.. அதுவும் அரசு பொது மருத்துவமனையில்.. அதுவும் உயிரை காப்பாற்றும் பெண் டாக்டர்களுக்கே.. என்ன நடந்தது?

கடந்த வருடம் நம் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமாக இருந்தது.. இதனால், எத்தனையோ டாக்டர்களும், நர்ஸ்களும் தங்கள் குடும்பத்தை மறந்து தொற்று நோயாளிகளை பிழைக்க வைக்க போராடி வந்தனர்..

அந்தவகையில், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டாக்டர்களின் சேவையை மறக்க முடியாது.. உயிரையும் துச்சமென கருதி கொரோனா பாதித்தவர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவரும் வீடுகளுக்கு அனுப்பப்படமால் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

 ஹோட்டல் அறை

ஹோட்டல் அறை

அந்த வகையில், தேனாம்பேட்டையில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தனித்தனி அறைகளுடன் டாக்டர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது... அங்கு பெண் டாக்டர்களுக்கும் தனித்தனி ரூம்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், 2 பெண் டாக்டர்களின் ரூமுக்குள் அத்துமீறி நுழைந்த 2 டாக்டர்கள், அவர்களுக்கு செக்ஸ் டார்ச்சர் தந்துள்ளனர்.. வெற்றி செல்வன் என்ற டாக்டருக்கு 37 வயதாகிறது.. இவர் பெண் டாக்டர் ஒருவரின் ரூமுக்குள் நுழைந்து பாலியல் தொல்லை தந்துள்ளார்.. அதேபோல, 28 வயதே நிரம்பிய மோகன்ராஜ் என்பவர், வேறொரு பெண் டாக்டரின் ரூமுக்குள் நுழைந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

 மன உளைச்சல்

மன உளைச்சல்

இதனால் பாதிக்கப்பட்ட 2 பெண் டாக்டர்களும் கடுமையான அதிர்ச்சிக்கு ஆளாகினர்.. மன உளைச்சலிலும் பாதிக்கப்பட்டனர்.. 2 பேருமே வேறு வழியின்றி, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீனிடம் புகார் அளித்தனர்.. இதையடுத்து, இதுதொடர்பாக விசாரணை நடத்த குழு ஒன்று அமைக்கப்பட்டது... அந்த குழுவினர் நடத்திய விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட டாக்டர்கள் 2 பேரும், பெண் மருத்துவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதியானது.

கைது

கைது

இதையடுத்து, பெண் டாக்டர்கள் 2 பேரும், தேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்தனர்.. இந்த புகாரின் பேரில் டாக்டர்கள் வெற்றிச்செல்வன், மோகன்ராஜ் இருவரும் கைது செய்யப்பட்டனர்.. அத்துடன் இந்த விவகாரத்தில் தொடர்ந்து மருத்துவர்கள், செவிலியர்கள் , மருத்துவ பணியாளர்களுக்கு பாலியல் தொல்லை உள்ளதா என மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் முதல்வர்களும் , இயக்குனர்களும் , நேரடியாக சென்று புகார் வந்தால் , உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவக் கல்வி இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது... அதுமட்டுமல்ல, இரண்டு டாக்டர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

நிபுணர்கள்

நிபுணர்கள்

கைதான இந்த டாக்டர்கள் குறித்து மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது.. கைதான வெற்றிச்செல்வன் கடலூரை சேர்ந்தவராம்.. எலும்பு நோய் சிகிச்சை நிபுணர் ஆவார்.. கிங்ஸ் இன்ஸ்டியூட்டிட்டில் எலும்பு நோய் சிகிச்சை பிரிவில் பணியாற்றி வந்துள்ளார். அதேபோல மற்றொரு டாக்டர் மோகன்ராஜ் என்பவர் மயக்கவியல் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார்..

 நியமனம்

நியமனம்

கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் விடுதியில் தங்கியிருந்தபோதுதான், 2 பெண் டாக்டர்களை மிரட்டி மிரட்டியே பாயில் வன்கொடுமைக்கு ஆளாகி ஆளாக்கி இருக்கிறார்கள்... இதில் வெற்றி செல்வன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கும், மோகன்ராஜ் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் 2 பேருமே கொரோனா பணிக்காக ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்களாம்.. அதேபோல பாதிக்கப்பட்ட பெண் டாக்டர்களும் ஒப்பந்த அடிப்படையிலேயே நியமிக்கப்பட்டவர்கள்தானாம்.

சிறுவன்

சிறுவன்

இந்த 2 வருடங்களாக, வடமாநிலங்களில் எத்தனையோ இடங்களில், கொரோனா சிகிச்சையின்போது பெண் பணியாளர்கள், நோயாளிகளுக்கு பாலியல் தொந்தரவுகள் ஏற்பட்டதாக செய்திகள் வந்தன.. சிறுவன், சிறுமிகளைகூட கொரோனா முகாமில் காமுகர்கள் விட்டுவைக்காத செய்திகள் வந்தன.. ஆனால் இப்போது நம் தமிழ்நாட்டிலேயே இப்படி ஒரு கொடுமை டாக்டர்களுக்கே நடந்தேறியிருப்பதுதான் அதிர்ச்சியை தந்து வருகிறது.

சீண்டல்கள்

சீண்டல்கள்

நாளுக்கு நாள் தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்தபடியே உள்ளன.. பெண்களுக்கான சீண்டல்களும் பெருகி கொண்டே போகிறது.. கோவை மாணவியின் தற்கொலை விவகாரத்தில் இருந்து இன்னும் மீள முடியாத நிலைமை உள்ளது.. அதற்குள் அடுத்த அதிர்ச்சி கிளம்பி உள்ளது.. மெத்த படித்த ஆசிரியர்களும், டாக்டர்களுமே இப்படி கீழ்த்தரமான காரியங்களில் ஈடுபட்டு வருவது தமிழக மக்களுக்கு மேலும் வருத்தத்தை தந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+