செந்தில் பாலாஜி, ’டாஸ்மாக்’ வழக்கை விசாரித்த ED அதிகாரிகள் 2 பேர் திடீர் இடமாற்றம்? என்ன நடந்தது
சென்னை: செந்தில் பாலாஜி வழக்கை விசாரித்த சென்னை மண்டல அமலாக்கத்துறை இணை இயக்குநர், துணை இயக்குநர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த இணை இயக்குநர் பியூஸ் குமார் யாதவ் மற்றும் துணை இயக்குநர் கார்த்திக் தசாரி வருமான வரித்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் மண்டல வாரியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை மண்டலத்தின் இணை இயக்குனர் பியூஸ்குமார் யாதவ், துணை இயக்குனர் கார்த்திக் தசாரி ஆகிய 2 பேரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வருமானவரித்துறையில் பணியாற்றி வந்த 2 பேரும் மாற்றுப் பணியாக அமலாக்கத்துறையில் பணியாற்றி வந்தனர். தற்போது அவர்கள் மீண்டும் வருமான வரித்துறைக்கே பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஐஆர்எஸ் அதிகாரிகளான 2 பேரும் தான் தமிழக 'டாஸ்மாக்' முறைகேடு வழக்கு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான செம்மண் முறைகேடு வழக்கு, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக கதிர் ஆனந்த் எம்.பி. மீது தொடரப்பட்ட வழக்கு, ஜி ஸ்கொயர் வழக்கு, அமைச்சர் அனிதா ராதகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரித்தும், கண்காணித்தும் வந்தனர்.
மேலும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அவரது வீட்டில் வைத்து இணை இயக்குனர் பியூஸ்குமார் யாதவ் தலைமையிலான அதிகாரிகள்தான் கைது செய்து இருந்தனர். தமிழகத்தையே பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ள வழக்குகளை விசாரித்து வந்த இந்த இரண்டு அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமலாக்கத்துறையில் முக்கிய அதிகாரிகளின் இந்த இடமாற்றம் பல்வேறு யூகங்களுக்கும் வித்திட்டுள்ளது. தமிழகத்தில் ஆளும் திமுக அரசுக்கு எதிரான பிடியை இறுக்கும் நோக்கில் அமலாக்கத்துறை மூலம் நெருக்கடி கொடுப்பதாக மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்த சூழலில், இரண்டு அதிகாரிகளின் இடமாற்றம் கவனம் ஈர்த்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications