பழிக்கு பழி - தாம்பரத்தில் பட்டப்பகலில் இரு இளைஞர்கள் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை
சென்னை: சென்னை தாம்பரத்தில் இரண்டு இளைஞர்கள் இன்று அதிகாலை ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அச்சமடைய செய்துள்ளது. பழிக்கு பழி வாங்கும் விதமாக இந்தக் கொலை சம்பவம் அரங்கேறியுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
தாம்பரத்தை அடுத்த மணிமங்கலத்தைச் சேர்ந்தவர் தேவா. இவர் மீது அங்குள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவாகி இருந்தன. தேவா தலைமையில் ஒரு ரவுடி கும்பல் மணிமங்கலத்தில் இயங்கி வந்திருக்கிறது. இதனிடையே, அதே பகுதியில் இருந்த மற்றொரு ரவுடி கும்பலுக்கும், தேவா கும்பலுக்கும் இடையே யார் பெரியவர்கள் என்பது தொடர்பாக அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த சூழலில், கடந்த மார்ச் மாதம் நள்ளிரவு தேவாவை எதிரணியைச் சேர்ந்தவர்கள் வெட்டிக் கொலை செய்தனர். இந்தக் கொலை வழக்கில் விக்கி (23), சுகன் (20) உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 5 மாதங்கள் சிறையில் இருந்த நிலையில், கடந்த மாதம்தான் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை விக்கியும், சுதனும் மதுபோதையில் மணிமங்கலம் அருகே உள்ள பகுதியில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல், விக்கியையும், சுகனையும் கற்கள் மற்றும் இரும்பு ராடுகளால் கொடூரமாக தாக்கியது. இதில் நிலைக்குலைந்து விழுந்த இருவரையும் அந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது. இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இருவரையும் குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனில்லாமல் விக்கியும், சுகனும் உயிரிழந்தனர். இதுகுறித்து மணிமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேவா கொலைக்கு பழித்தீர்க்கவே இந்தக் கொலை நடந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
தொடரும் கொலை...
சென்னையில் சமீபகாலமாக கொலை சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. கடந்த வாரம் அம்பத்தூர் காவல் நிலையம் எதிரிலேயே கார்த்திக் ராஜா என்ற இளைஞர் மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்!












Click it and Unblock the Notifications