ஷாக்! சென்னையில் 4 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்! பாலியல் வன்கொடுமை செய்த 2 வடமாநிலத்தவர் கைது!
சென்னை : சென்னையில் அதிர்ச்சி தரும் வகையில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 2 வடமாநிலத் தொழிலாளர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்திற்கு வேலைவாய்ப்பு, வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் வருகை தருகின்றனர். அவர்கள் குறித்த தகவல்கள் ஏதுவும் தமிழக காவல்துறை அதிகாரிகளிடம் இல்லை.
இந்நிலையில் நாளுக்குநாள் வடமாநில தொழிலாளர்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.குறிப்பாக கொலைகள், கொள்ளைகள், பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சிகரமானதாக உள்ளது.

குற்றங்கள் அதிகரிப்பு
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராமேஸ்வரத்தில் மீனவ பெண் ஒருவர் கொடூரமான முறையில் வடமாநில தொழிலாளர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதோடு, முகத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டார். இதனால் வடமாநில தொழிலாளர்கள் மீதான பார்வை மாறியுள்ளதோடு, அவர்கள் குறித்த விவரங்களை சேகரிக்க வேண்டுமெனவும், உள்நுழைவு சீட்டு முறையை கொண்டு வர வேண்டுமென்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

வடமாநில தொழிலாளிகள்
இந்நிலையில் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அதிர்ச்சி தரும் வகையில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 4 வடமாநிலத் தொழிலாளர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை எண்ணூர், அன்னை சிவகாமி நகர் அருகே வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.

பாலியல் வன்கொடுமை
இங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த சோன்( 23), மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஜீசாப்சோரன்(23) உள்ளிட்ட ஏராளமானோர் தங்கி வேலைபார்த்து வருகிறார்கள். இவர்களுடன் தொழிலாளி ஒருவர் தனது 4 வயது மகள் மற்றும் மனைவியுடன் தங்கி வேலை பார்த்தார். அவர்களுடன் தொழிலாளர்கள் சோன், ஜீசாப்சோரன் ஆகியோர் நன்கு பழகி வந்தனர்.

போலீசார் விசாரணை
இந்த நிலையில் தொழிலாளியின் 4 வயது மகளை அங்குள்ள ஒரு கோவில் பின்புறம் அழைத்து சென்று தொழிலாளர்கள் சோன், ஜீசாப்சோரன் ஆகிய இருவரும் பாலியல் ரீதியாக துன்புறுத்தினர். இதுகுறித்து சிறுமியின் தந்தை எண்ணூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழிலாளிகள் சோன், ஜீசாப் சோரன் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் அவர்களை திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
உலுக்கிடுச்சே.. மூடிய அறைக்குள் சிக்கிய காதலன்.. அரண்டு போன பிசினஸ்மேன் கணவன்! பெங்களூரு பகீர் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications