போதைப் பொருள் விற்பனை வழக்கு... தெலுங்கானா, மகராஷ்டிரா குற்றவாளிகள் சென்னையில் கைது!
சென்னை: போதைப் பொருள் விற்பனை செய்த வழக்கில், சென்னையில் பதுங்கியிருந்த மும்பை, ஐதராபாத்தை சேர்ந்த 2 முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 15 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழகம் முழுதும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க மாநில அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், இதுதொடர்பாக, தமிழகம் முழுவதும் சோதனைகள் அவ்வபோது நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, வடசென்னை புதுவண்ணாரப்பேட்டை காவல் எல்லைக்கு உட்பட்ட பழைய எம்.பி.டி குடியிருப்பில், போதை பொருட்கள் விற்பனை செய்யவதாக போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ரகசிய தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்ற பார்த்த போது, ஆள்நடமாட்டம் இல்லாத பாழடைந்த வீட்டில் சிலர் தங்கியிருந்தது கண்டுபிடிக்கபட்டது. போலீசார் வருவதை கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்ப முயன்றனர். 2 பேரை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், பிடிபட்டவர்கள் தெலுங்கான மாநிலத்தை சார்ந்த ரமேஷ் ஆய்தா, மஹாராஷ்ட்ராவை சார்ந்த பயாஸ் அஸமத் என்பது தெரிய வந்தது. மேலும், அந்த நபர்களிடமிருந்து, 80 கிராம் எடை கொண்ட மெத்தம்பெட்டமின் என்னும் போதை பொருளும், சுமார் 15 கிலோ எடையுள்ள எபெட்ரைன் என்னும் போதை மருந்துக்கான மூலப்பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களின் விலை சுமார் 12 இலட்சம் வரை இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
பிடிபட்ட ரமேஷ் ஆய்தா, ஏற்கனவே மெத்தபெட்டமின் போதைப் பவுடர் விற்பனை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல போதைப்பொருள் வியாபாரி என்பது குறிப்பிடத்தக்கது. பிடிபட்ட இருவரையும் கைது செய்த போலீசார், வடசென்னை பகுதியில் மெத்தகேட்டமைன் போதை பவுடர் விற்பதற்கு மீண்டும் இங்கு வந்துள்ளார்களா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரித்து மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications