அண்ணா பிறந்தநாள்- 322 கைதிகள் விடுதலை - 187 பேருக்கு மறுப்பு- வீரப்பன் கூட்டாளிகள் 2 பேர் ரிலீஸ்!
சென்னை: பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 322 கைதிகளை விடுதலை செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி. ஒப்புதல் அளித்தார். இதையடுத்து 35 ஆண்டுகாலம் சிறை தண்டனை அனுபவித்த சந்தனக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் 2 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு நீண்டகால சிறை கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்படுவது வழக்கம். இதனடிப்படையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 509 கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.

322 பேர் விடுதலைக்கு ஒப்புதல்!
ஆனால் 509 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பு எந்த முடிவும் எடுக்கவில்லை என கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் தமிழக அரசு பரிந்துரைத்த 509 பேரில் 322 பேரை மட்டும் விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் தெரிவித்துள்ளாராம்; 187 பேரை விடுதலை செய்யும் கோரிக்கையை ஆளுநர் ஆர்.என்.ரவி நிராகரித்திருக்கிறார்.

வீரப்பன் கூட்டாளிகள் விடுதலை
தற்போது ஆளுநரின் இந்த உத்தரவின் அடிப்படையில் 35 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த, சந்தனக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகளான ஆண்டியப்பன் மற்றும் பெருமாள் ஆகிய 2 பேர் கோவை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். 1987-ம் ஆண்டு வனச் சரகர் சிதம்பரம் உட்பட 3 பேரை வீரப்பன் படுகொலை செய்தார். இந்த வழக்கில்தான் ஆண்டியப்பன், பெருமாள் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர். இவ்வழக்கில் வீரப்பனின் அண்ணன் மாதையனும் கைது செய்யப்பட்டிருந்தார். அண்மையில் வயது மூப்பின் காரணமாக சிறை கைதியாக இருந்த நிலையிலேயே மாதையன் மரணம் அடைந்தார்.

முஸ்லிம் சிறை கைதிகள்
நீண்டகால சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டு வரும் நிலையில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் முஸ்லிம் சிறை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்கிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி. 1998-ம் ஆண்டு கோவை குண்டுவெடிப்பின் போது அச்சம்பவத்துக்கு காரணமான அல் உம்மா பயங்கரவாத இயக்கம் தடை செய்யப்பட்டது. அல் உம்மாவின் தலைவர் பாஷா உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வன்னி அரசு கோரிக்கை
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தமது ட்விட்டர் பக்கத்தில், உச்சநீதிமன்ற
உத்தரவு படி,நளினி உள்ளிட்ட ஆறு பேர் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து, 35ஆண்டுகளாக ஆயுள்சிறைவாசியாக இருந்த வீரப்பன் கூட்டாளிகள் ஆண்டியப்பன்,பெருமாள் இப்போது கோவை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முதல்வர் @mkstalin அவர்களுக்கு நன்றி.வீரப்பன் கூட்டாளிகளையடுத்து, அதே கோவை சிறையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறைப்பட்டிருக்கும் இசுலாமிய சிறைவாசிகளையும் ஆளுனரின் கையெழுத்துக்காக காத்திருக்காமல், தமிழ்நாடு முதல்வர் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications