உஷாரய்யா உஷாரு.. 12பி பஸ்ஸில் உஷாரு.. சென்னையில் சிக்கிய ஜெயில் பறவைகள்.. ஓடும் பஸ்ஸில் அம்மாடியோவ்!
சென்னை: சென்னையில் கேகே நகரைச் சேர்ந்தவர் திநகருக்கு 12 பி பஸ்ஸில் சென்ற போது, ஓடும் பஸ்சில் ரூ.2½ லட்சம் திருடிய பிக்பாக்கெட் பெண்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் பஸ்ஸில் செல்லும் போது பணத்துடன் சென்றால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள். பணத்தை பஸ்ஸில் எண்ண வேண்டும். பஸ்சில் பயணிக்கும் போது நகைகைளை எடுத்து பார்ப்தோ அல்லது பணத்தை எண்ணுவதோ வேண்டாம். அப்படி செய்தால், அதனை பார்க்கும் திருடர்கள் பிட்பாக்கெட் அடித்து செல்ல வாய்ப்பு உள்ளது.
வடிவேலு பட பாணியில் ஏதாவது ஒரு நாடகத்தை நடத்தி, உங்கள் கவனத்தை திசை திருப்பி பணத்தை திருடி விடுவார்கள் எனவே கவனமாக இருங்கள். அப்படித்தான் இங்கு பிக்பாக்கெட் பெண்கள் கைவரிசையை காட்டி உள்ளார்கள்.என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

சென்னை கே.கே.நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார் என்பவர் தனது மனைவியுடன் தியாகராயநகருக்கு 12-பி மாநகர பஸ்சில் ஏறி சென்றுள்ளார். பஸ்ஸில் கூட்டம் அதிகமாகவே இருந்துள்ளார். நகை வாங்குவதற்காக தனது மனைவியுடன் சென்றவர் பையில்ரூ.2½ லட்சம் பணம் வைத்திருந்தார்.
தியாகராய நகரில் பஸ்சை விட்டு இயங்கியபோது, அவர் பையில் வைத்திருந்த ரூ.2½ லட்சத்தையும் காணவில்லை. யாரோ கவனத்தை திசை திருப்பி திருடி சென்றுவிட்டார்கள் ஓடும் பஸ்சில் ரூ.2½ லட்சத்தை பறிகொடுத்த விஜயகுமார் தம்பதி பதறினார்கள். இது குறித்து மாம்பலம் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர்.
அவர்கள் 12பி பஸ்சில் விஜயகுமார் தம்பதியுடன் ஒட்டி உரசியபடி வந்த 2 பெண்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் தியாகராயநகருக்கு முந்தைய பஸ் ஸ்டாப்பில் இறங்கிச்சென்று விட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மாம்பலம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். உடனடியாக களத்தில் இறங்கிய போலீசார், அவர்களின் சிசிடிவி காட்சிகளை பார்த்த போது பிரபல பிக்பாக்கெட் ராணிகளான பரமக்குடி கவிதா (வயது 45), ரேகா (43) என்பது தெரியவந்தது.
ஜெயில் பறவைகளான இவர்கள் அடிக்கடி பிக்பாக்கெட் அடிப்பது பின்னர் போலீசிடம் மாட்டிக்கொண்டு சிறைக்குப் போவது வாடிக்கை. இருவரையும் தேடி கண்டுபிடித்து போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவரிடமும் இருந்து விஜயகுமார் தம்பதி பறிகொடுத்த பணம் மீட்கப்பட்டது. இதனால் அந்த தம்பதி நிம்மதி அடைந்தனர்.












Click it and Unblock the Notifications