பட்டப் பகலில்.. ஸ்பென்சர் பிளாசாவில்.. கத்தியை சுழற்றிய 2 இளைஞர்கள்.. மிரண்டு ஓடிய மக்கள்!
சென்னை: பட்டப்பகலில்... ஸ்பென்சர் பிளாசாவில் கத்தியை சுழட்டியபடி மிரட்டி பொதுமக்களை மிரண்டு ஓடவிட்ட 2 இளைஞர்களை போலீசார் புழலில் தூக்கி வைத்துள்ளனர்.
Recommended Video
சென்னை ஸ்பென்சர் பிளாசாவில் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.. மக்கள் நடமாட்டம் இந்த வளாகம் மூடப்படும்வரை இருக்கும். ஒவ்வொரு தளங்களிலும் ஏராளமான கடைகள் உள்ளன.

அந்த வகையில் நேற்று முன்தினம் பொதுமக்கள் கடைக்குள் நிரம்பி வழிந்தனர்.. அப்போது இளைஞர் ஒருவர் திடீரென கத்தியுடன் உள்ளே நுழைந்தார்.. தலைமுடியை காடு போல வளர்த்து தொங்கவிட்டிருந்தார். அவர் பெயர்தான் ஆண்டனி.. இவரும், நடராஜன் என்பவரும் இங்குள்ள ஷு கடையில் வேலை பார்த்துள்ளனர். ஆண்டனிக்கு வயசு 19, நடராஜனுக்கு வயசு 20!
அதேபோல 2-வது மாடியில் உள்ள கண்ணாடி கடையில் வேலை பார்ப்பவர் கேசவன்.. இவருக்கும் ஆண்டனிக்கும் ஏற்கனவே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.. அப்போது கேசவன் ஆண்டனியை தாக்கி உள்ளார்.. அவரை பழி வாங்குவதற்காகத்தான ஆண்டனி நண்பர் நடராஜனை அழைத்து கொண்டு வந்தார். அங்கிருந்த கேசவனையும் சரமாரியாக தாக்கினார்.
இதை பார்த்து மிரண்ட பொதுமக்கள், அவர்களை தடுத்து நிறுத்தி பிடிக்க முயன்றனர்.. ஆனால், ஆண்டனி டக்கென கையில் கத்தியை எடுத்து காட்டி பொதுமக்களை வெட்ட முயன்றார்.. இதனால் அவர்கள் தலைதெறித்து ஓடினர்.. சிலர் மிரண்டு உறைந்து நின்றனர்.. அவர்களில் ஒருவர் உடனடியாக கன்ட்ரோல் ரூமுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லவும், உடனடியாக போலீசார் விரைந்து வந்தனர். பிறகு அங்கிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். நடந்த சம்பவம் முழுவதும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஆயிரம் விளக்கு போலீசார் கத்தியுடன் சுற்றிய ஆண்டனி, மற்றும் நடராஜனை கைது செய்து புழலில் அடைத்தனர். கையில் கத்தியை காட்டிய ஆண்டனியின் இந்த சிசிடிவி காட்சியை போலீசார் இப்போது வெளியிட்டுள்ளனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications