சென்னையில் தம்பியைக் கொன்றுவிட்டு நாடகம்.. வசமாக சிக்கிய அண்ணன்கள்.. அதிர்ந்த போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையை அடுத்த மாங்காடு அருகே குடிபோதையில் தகராறு செய்த தம்பியை அண்ணன்கள் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, குடிபோதையில் இறந்ததாக நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அண்ணன்கள் இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர்.

சென்னை அருகே உள்ள மாங்காடு அடுத்த வடக்கு மலையம்பாக்கம், சோழன் நகரைச் சேர்ந்தவர் சாராள் வயது 50. இவருக்கு மைக்கேல்ராஜ் (27), மதன்ராஜ் (25) கோவில்ராஜ் (25) ஆகிய மகன்கள் உள்ளனர்.

மது பழக்கத்துக்கு அடிமையான கோவில்ராஜ் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுகுடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபவது வழக்கமாம்.. இரண்டு தினங்களுக்கு முன்பு மது அருந்திவிட்டு போதையில் வீட்டிற்கு வந்த கோவில்ராஜ், வீட்டில் உள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டிருக்கிறார்.

குடும்பத்தினர் அழுகை

குடும்பத்தினர் அழுகை

பின்னர் வீட்டின் வெளியில் படுத்து உறங்கியிருக்கிறார். நேற்று முன்தினம் காலையில் கோவில்ராஜ் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்துள்ளார். இதையடுத்து அவர் இறந்துவிட்டதாக குடும்பத்தினர் கதறி அழுதுள்ளனர். பின்னர் இந்தத் தகவல் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அன்றைய தினமே அவசர அவசரமாக கோவில்ராஜின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது.

குடிபோதை

குடிபோதை

இந்தநிலையில் கோவில்ராஜ் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் நண்பர் ஒருவர் மாங்காடு போலீசில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார், வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். சந்தேகத்தின் பேரில் கோவில்ராஜின் அம்மா சாராள் (50), அண்ணன்கள் மதன்ராஜ் (27), மைக்கேல்ராஜ் (29) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இதையடுத்து அவர்களை தனியாக வைத்து தீவிரமாக விசாரித்தனர். அதில் கோவில்ராஜ் அடிக்கடி குடிபோதையில் வந்து குடும்பத்தினரிடம் தகராறு செய்துள்ளார்.

நாடகம்

நாடகம்

இதனால் இரண்டு அண்ணன்களும் ஆத்திரத்தில் இருந்தனர். இதையொட்டி சம்பவ தினத்தன்று இரவு குடும்பத்தினரிடம் தகராறு செய்துவிட்டு வீட்டுக்கு வெளியே கோவில்ராஜ் படுத்து தூங்கி உள்ளார், அப்போது இரண்டு அண்ணன்களும் அவரை கழுத்தை நெறித்துக் கொலை செய்தனர். மறுநாள் குடிபோதையில் இறந்ததாக நாடகம் போட்டு அடக்கம் செய்தனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

சிறையில் அடைப்பு

சிறையில் அடைப்பு

இதையடுத்து மைக்கேல்ராஜ், மதன்ராஜ் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அடக்கம் செய்யப்பட்ட கோவில்ராஜின் சடலத்தை போலீஸார் தோண்டியெடுக்க முடிவு செய்திருக்கின்றனர். கோவில்ராஜ் கொலை தொடர்பாக அவரின் அம்மா சாரளையும் போலீசார் கைது செய்தனர். மைக்கேல்ராஜ், மதன்ராஜ், அவரது அம்மா சாரள் ஆகிய மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+