உதய்பூர் டெய்லர் கொலை வழக்கு! இஸ்லாம் இதை போதிக்கவில்லை! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!
சென்னை: நபிகளார் மீதான அன்பு என்ற போர்வையில் ராஜஸ்தான் மாநிலன் உதய்பூரில் தையல் கடைக்காரர் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு கண்டனத்திற்குரியது என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
Recommended Video
முஹம்மது நபிகளார் அவர்கள், தன்னை நிந்தித்தவர்களை கூட பொறுமையாலும், அன்பாலும் வென்றவர் என அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
''ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல் கடைக்காரர் ஒருவர் தலை வெட்டப்பட்டு மிகக் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டிருப்பதை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.''
''முஹம்மது நபிகளார் அவர்கள், தன்னை நிந்தித்தவர்களை தனது வாழ்நாள் முழுவதும் உடல்ரீதியான எந்த தொந்தரவையும், தீங்கையும் அளிக்கவில்லை. தன்னைத் தாக்கிய மக்களை நபிகளார் சபிக்கவும் இல்லை, இந்த சூழலில் நபிகளார் மீதான அன்பு என்ற போர்வையில் தையல் கடைக்காரரை படுகொலை செய்து அதனை சமூகவலை தளத்தில் பரப்பியவர்கள் காட்டுமிராண்டித் தனமான செயலில் ஈடுபட்டுள்ளனர்.''
''இது முற்றிலும் அராஜகமான செயல். சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்வதற்கு எவருக்கும் அனுமதி இல்லை. இஸ்லாமும் இதனைக் கண்டிக்கின்றது. ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம் சமுதாயம் ஒரே குரலில் இந்த அக்கிரமத்துக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்பியிருக்கின்றது.''
''இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.''
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications