சொன்னதை செஞ்சிட்டாரு.. மோடிக்கு வாழ்த்துகள்! பாரத் பெயர் மாற்றம் குறித்த உதயநிதி கிண்டல்
சென்னை: ஜி20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியை குறிக்க இந்தியா என்பதற்கு பதில் பாரதம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. பாரத் பெயர் விவகாரத்தில் பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் விமர்சித்துள்ளார்.
எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்க்க எதிர்க்கட்சிகள் 'இந்தியா' கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்தியா கூட்டணி என்கிற பெயரில்தான் அனைத்து கூட்டங்களையும் எதிர்க்கட்சிகள் நடத்தி வருகின்றன. எதிர்க்கட்சிகள் இந்த 'இந்தியா' எனும் பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று பாஜக தொடர்ந்து கூறி வருகிறது. இந்நிலையில் நாட்டின் பெயரை இந்தியா என்பதிலிருந்து பாரதம் என்று மாற்ற மத்திய அரசு முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கேற்றாற்போல பாஜக தலைவர்கள் பலர், "இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் வைத்த பெயர். பாரதம்தான் நமது உண்மையான பெயர்" என்று கூறி வருகின்றனர். இந்த சலசலப்புகள் ஒருபுறம் இருக்கையில் மறுபுறம் மற்றொரு பஞ்சாயத்து வெடித்து கிளம்பியிருக்கிறது. அதாவது ஜி20 மாநாட்டின் பிரதிநிதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு விருந்துக்கான அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்கு பதில், 'பாரத' குடியரசுத் தலைவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
வழக்கமாக 'இந்திய' குடியரசுத் தலைவர் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் இம்முறை பாரதம் என்று குறிப்பிடப்பட்டிருப்பது, ஏற்கெனவே இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும் என்று பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வரும் கருத்தியலுக்கு வலு சேர்ப்பதை போல இந்த நடவடிக்கை இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. இதனைத் தொடர்ந்து ஜி20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் இருக்கையை குறிக்கும் பெயர் பலகையில் 'இந்தியா' என்பதற்கு பதில் 'பாரத்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "இந்தியாவையே மாத்திக் காட்டுகிறேன்னு 9 வருசத்துக்கு முன் மோடி சொன்னாரு. இதோ மாத்திட்டாரு. சொன்னதை செஞ்சிட்டாரு. மோடிக்கு வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.
முன்னதாக பாரத் என்கிற பெயர் பயன்படுத்தப்பட்டதற்கு, "நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின் 1ன் படி, 'இந்தியாவாக இருந்த பாரதம் மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்' என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால் தற்போது இந்த மாநிலங்களின் ஒன்றியம் கூட தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது" என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில் விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications