சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆளுக்கு ஒரு பேக்.. அசந்து போன குருக்கள்.. அசரடித்த உதயநிதி ஸ்டாலின்.. ஆச்சரியத்தில் திருவல்லிக்கேணி

பார்த்தசாரதி கோயில் குருக்களுக்கு உதயநிதி நிவாரண உதவி வழங்கினார்

Google Oneindia Tamil News

சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் குருக்கள்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நிவாரணப் பொருட்களை வழங்கி உள்ளார்.. இதையடுத்து உதயநிதியின் செயல்பாடுகள் தொகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

நடந்து முடிந்த தேர்தலில் திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதில் போட்டியிட்டார்.. இவருக்கு இளைஞர் அணி தரும்போதும் சரி, சீட் தரும்போதும் சரி, வாரிசு என்ற அடிப்படையிலேயே விமர்சிக்கப்பட்டு வந்தார்.

ஆனால், தொகுதியில் போட்டியிட்டு 68 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, எம்எல்ஏவாகவும் பதவியேற்றதிலிருந்து, உதயநிதி மீது வாரிசு என்ற பார்வை மெல்ல மெல்ல மாற தொடங்கிவிட்டது.. மாறாக, தொகுதியின் எம்எல்ஏ என்ற அணுகுமுறையும் பெருகி வருகிறது.

 உதயநிதி

உதயநிதி

அதற்கேற்றபடி, இந்த ஒரு வாரமாகவே, தொகுதியின் பல்வேறு பகுதிகளிலும் உதயநிதி ஆய்வு செய்து வருகிறார்.. எந்த தெருவையும் விட்டு வைக்கவில்லை.. சாக்கடையும், மழைநீரும் கலந்த நீரில் நடந்து சென்று, ஹவுசிங்போர்டு பகுதியை பார்வையிட்டதையும், குப்பை கொட்டுவது முதல் பொது கழிவறையை ஆய்வு செய்தது வரை அனைத்து செயல்பாடுகளையும் மக்கள் கவனித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

 விழிப்புணர்வு

விழிப்புணர்வு

இதுபோக, தடுப்பூசி விழிப்புணர்வு, கொரோனா கால நிவாரண உதவிகளையும் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று நேரில் வழங்கி வருகிறார்.. தான் தினந்தோறும் தொகுதியில் செய்யக்கூடிய நடவடிக்கைகளை தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் உடனுக்குடன் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இன்று தொகுதியில் பிரசித்தி பெற்ற திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலின் குருக்கள்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார்.

 நிவாரணம்

நிவாரணம்

இதுகுறித்து தனது ட்விட்டரில், "கொரானா ஊரடங்கால் கோயில்கள் அனைத்திலும் பொதுமக்கள் தரிசனம் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் குருக்கள்களுக்கு அரிசி-பருப்பு உள்ளிட்ட ஊரடங்கு கால நிவாரணப் பொருட்களை இன்று வழங்கினோம்" என்றும் பதிவிட்டுள்ளார்.

 ட்வீட்

ட்வீட்

உதயநிதியின் இந்த பதிவுக்கு பலரும் பாராட்டி கமெண்ட் போட்டு வருகின்றனர்.. திமுகவை பொறுத்தவரை இந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற விமர்சனங்கள் நிறையவே உள்ளது.. அதிலும் கருணாநிதி மறைவுக்கு பிறகு, வெளிப்படையாகவே பலர் திமுகவை விமர்சித்து வந்தனர்.. துர்கா ஸ்டாலின் எப்போதெல்லாம் கோயிலுக்கு போகிறாரோ அப்போதெல்லாம் இப்படி பேச்சு எழும்.. அதேபோல திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல், அவர்மீதும் புகார்கள் கிளம்பின. ஆனால், அனைத்து விமர்சனங்களையும் நொறுக்கியது உதயநிதி ஸ்டாலின்தான்.

சர்ச்சைகள்

சர்ச்சைகள்

தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ஸ்டாலின் அங்கு கொடுக்கப்பட்ட விபூதியை கையில் வாங்கி அப்படியே தரையில் கொட்டி கையை துடைத்து கொண்டதாக சர்ச்சைகள் எழுந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின், மறுநாளே தருமபுரம் ஆதீனத்திடம் திருநீறு பூசி ஆசிபெற்றதுடன், இந்துக்களுக்கு எதிரான கட்சி திமுக இல்லை என்பதை நிரூபித்தார்.

 திமுக

திமுக

இப்போதும் நிவாரண பணி வழங்குவதிலும், பாகுபாடு காட்டாமல், கோயில் குருக்கள்களுக்கும் உதயநிதி வழங்கியதுட,ன திமுக அனைவருக்குமான கட்சி என்பதை நிரூபித்துள்ளார்.

English summary
Udayanithi Stalin donates relief items to Tiruvallikeni Parthasarathy temple priests
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X