Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முடிஞ்ச்.. தென் மாவட்ட ஆர் பி உதயகுமாரும் ஓபிஎஸ்சை கைவிட்டாச்சு! எடப்பாடிக்குதான் 99% மா.செ. ஆதரவாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென் தமிழகத்திலிருந்தும் எடப்பாடிக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. அவருக்கு 99 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த பேச்சு விஸ்வரூபம் எடுத்து வருகிறது. எடப்பாடி பழனிச்சாமியை ஒற்றை தலைமையாக ஏற்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இது தொடர்பாக 8ஆவது நாளான இன்றும் எடப்பாடி பழனிச்சாமி வீட்டிலும் ஓபிஎஸ் வீட்டிலும் நிர்வாகிகள் தனித்தனியே ஆலோசனை நடத்தியிருந்தனர். இன்றைய தினம் தீர்மான குழு அதிமுக அலுவலகத்தில் கூடுகிறது.

Recommended Video

    EPS-க்காக குவிந்த தொண்டர்கள்! OPS வீட்டில் ஆலோசனைகள் | *Politics

    ஒற்றைத் தலைமை

    ஒற்றைத் தலைமை

    அந்த குழுவினர் ஒற்றைத் தலைமை குறித்த தனித்தீர்மானத்தை இறுதி செய்யும் பணிகளை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் ஓபிஎஸ் தரப்போ பொதுக் குழு கூட்டத்தை ஒத்தி வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்கள். இதை எடப்பாடி தரப்பு மறுத்து, திட்டமிட்டபடி பொதுக் குழு நடைபெறும் என தெரிவித்துள்ளது.

    அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர்

    அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர்

    இந்த நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர் பி உதயகுமார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் சந்தித்து பேசினார். சிறிது நேரம் அவருடன் ஆலோசனை நடத்தினார். அவருடன் மேலும் சில மூத்த நிர்வாகிகள் உடன் சென்றனர்.

    உதயகுமார் பேட்டி

    உதயகுமார் பேட்டி

    இதையடுத்து உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் கடந்த 4 ஆண்டு காலமாக அதிமுகவை வழிநடத்தி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. அவர் தாயுள்ளம் கொண்டவராக திகழ்கிறார். அவர் அதிமுகவை தலைமை தாங்க வலியுறுத்தி பேசியிருக்கிறோம். தென் தமிழகத்திலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

    99 சதவீதம் அதிமுக

    99 சதவீதம் அதிமுக

    தமிழகத்தில் 99 சதவீதம் அதிமுகவினர் எடப்பாடி பழனிச்சாமிக்குத்தான் ஆதரவு தெரிவிக்கிறார்கள். அதிமுக தொண்டர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் எடப்பாடி பழனிச்சாமியை ஒற்றைத் தலைமையாக்கும் தீர்மானத்தை ஓபிஎஸ் வழிமொழிய வேண்டும். ஓபிஎஸ் அரசியலில் யாருக்கும் துரோகம் செய்யாதவர். அவரை யாரும் ஓரம்கட்ட மாட்டோம் என்றார் உதயகுமார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+