உதயநிதியை ஏற இறங்க பார்த்த சிறுவன்.. அன்பில் மகேஷுக்கு கண்டனம் தெரிவித்த திமுக "புள்ளி".. செம வீடியோ
உதயநிதி, அன்பில் மகேஷ் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது
சென்னை: மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர். ராஜா ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. அந்த ட்வீட் மட்டுமல்ல, அதற்கு பின்னணியில் இது தொடர்பான வீடியோக்களும், மீம்ஸ்களும் சேர்ந்தே இணையத்தில் படுவைரலாகி கொண்டிருக்கின்றன.
Recommended Video
தமிழகத்தில் இத்தனை மாதங்களும் தொற்று பீடித்து வந்த நிலையில், இப்போதுதான் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது.
இதன்காரணமாக, 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளும் கடந்த 1-ம்தேதி திறக்கப்பட்டன... இந்நிலையில், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆனை மலை அருகே உள்ள பெத்தநாயக்கனூர் பள்ளியை பார்வையிட சென்றார்..

உதயநிதி
அப்போது எம்எல்ஏ உதயநிதியும் அவருடன் சென்றார். காரணம், ஆனைமலை அருகே ஷூட்டிங் ஒன்றில்தான் உதயநிதியும் கலந்து கொண்டிருந்தார்.. அதனால், அவரையும் அழைத்து கொண்டு, அந்த பள்ளிக்கு சென்றுள்ளார் அன்பில் மகேஷ்.. ஸ்கூல் வாசலில் அன்பில் மகேஷும், உதயநிதியும் வந்து கொண்டிருந்தனர்.. அப்போது அந்த பள்ளியில் படிக்கும் ஒரு சிறுவன், அங்கே வந்துள்ளான்..

வீடியோ
இவர்கள் 2 பேரையும் சிறுவன் ஏற இறங்க பார்த்தான்.. பிறகு திரும்பி திரும்பி பார்த்தான். அதை பார்த்த அமைச்சர் அன்பில் மகேஷ், "உன்னை பார்க்கத்தான் உதயநிதி வந்திருக்கிறார்" என்று சொன்னார்.. அதை கேட்டதுமே, அந்த சிறுவன் ஸ்கூலுக்குள்ளே ஓடிவிட்டான். இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலானது.. பிறகு மீம்ஸ்களும் இந்த வீடியோவை வைத்து வெளியாக ஆரம்பித்துள்ளன..

கண்டனம்
அதில் "ஸ்கூல்ல கட் அடிக்கிறப்போ டீச்சர்கிட்ட மாட்டுவாங்க.. பிரின்சிபல்கிட்ட மாட்டுவாங்க.. மினிஸ்டர்கிட்ட மாட்டி பாத்திருக்கீங்களா?" என்ற மீம் பலரால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இந்த மீம்ஸைதான் மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா தன்னுடைய ட்வீட்டில் பதிவிட்டுள்ளார்.. அதுமட்டுமல்ல, "மாணவர்கள் சார்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம்" என்று கிண்டலாக தெரிவித்துள்ளார்.

உதயநிதி
ஆனால் உண்மையில் அந்த சிறுவன், ஸ்கூலை கட் அடித்துவிட்டுதான் வெளியே வந்தானா? என்பது உறுதியாக தெரியவில்லை என்றாலும், நகைச்சுவையாக இந்த வீடியோ பலரால் பகிரப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்ல, டிஆர்பி ராஜா எப்போதுமே வித்தியாசமான ட்வீட்களை அடிக்கடி பதிவிடுவது வழக்கம்.. அந்த வகையில், நெருங்கிய நண்பர்களான உதயநிதி, அன்பில் மகேஷின் ஸ்கூல் வீடியோவும், அதையொட்டிய மீம்ஸ்களும், டிஆர்பி ராஜாவின் ட்வீட்டும் சோஷியல் மீடியாவில் றெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கின்றன.












Click it and Unblock the Notifications