ஸ்டாலின் பதவி ஏற்பு விழாவில்.. கசப்புகள் இன்றி கட்டிப்பிடித்த 2 பேர்.. வைரலான "அந்த" போட்டோ.. செம!
சென்னை: தமிழக முதல்வர் திமுக தலைவர் ஸ்டாலினின் பதவி ஏற்பு விழாவில் நடந்த சம்பவம் ஒன்று திமுகவினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் மாபெரும் வெற்றியை பெற்ற நிலையில் தமிழகத்தின் புதிய முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்றார். இன்று ஆளுநர் மாளிகையில் நடந்த எளிமையான விழாவில் தமிழகத்தின் 23வது முதல்வராக பொறுப்பேற்றார்.
தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பின் திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்துள்ளது. ஸ்டாலினை தொடர்ந்து திமுக சார்பாக 33 அமைச்சர்கள் வரிசையாக பதவி ஏற்றுக்கொண்டனர்.

என்ன
இந்த நிலையில் ஸ்டாலினின் பதவி ஏற்பு விழாவில் திமுக எம்எல்ஏக்கள், திமுக மூத்த நிர்வாகிகள், அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள், ஸ்டாலின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். அழகிரி குடும்பத்திற்கும் இந்த விழாவிற்காக அழைப்பு சென்று இருந்தது. திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நேற்றே அழகிரி தேர்தல் வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

வைரல்
ஸ்டாலின் முதல்வராவது குறித்து வாழ்த்து தெரிவித்து இருந்த அழகிரி, "முதல்வராக பதவி ஏற்கும் ஸ்டாலினைப் பார்த்துப் பெருமை அடைகிறேன். என்னுடைய தம்பி தமிழகத்தின் முதல்வராவதில் எனக்கு பெருமை. தம்பி மு.க.ஸ்டாலினுக்கு என்னுடைய வாழ்த்துகள். முதல்வராக கண்டிப்பாக ஸ்டாலின் நல்லாட்சி வழங்குவார்" என மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

கலந்து கொண்டனர்
இந்த நிலையில் இன்று நடந்த பதவி ஏற்பு விழாவில் அழகிரி மகன் தயாநிதி அழகிரி கலந்து கொண்டார். இதில் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினும் கலந்து கொண்டார். இந்த விழாவில் இருவரும் சாந்திகொண்டு, சில நிமிடங்கள் பேசினார்கள். அதன்பின் இருவரும் சந்தோசமாக கட்டிப்பிடித்து தங்கள் அன்பை பகிர்ந்து கொண்டனர்.

நெகிழ்ச்சி
திமுகவினர் மத்தியில் இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த போட்டோ வைரலாகி வருகிறது. அழகிரி குடும்பத்திற்கும், ஸ்டாலின் குடும்பத்திற்கும் கடந்த சில வருடங்களாக கசப்புகள் இருந்தது. அழகிரி திமுகவிற்கு எதிராக அரசியல் செய்வாரா என்றெல்லாம் கூட எதிர்பார்ப்புகள் இருந்தது. ஆனால் அழகிரியோ பெரிய அளவில் திமுகவை எதிர்க்காமல், தேர்தல் நேரத்தில் எதுவும் வாய்ஸ் கொடுக்காமல் அமைதி காத்தார்.

பாராட்டு
அதன்பின் ஸ்டாலின் வென்றதும், ஓடி வந்து தம்பிக்கு வாழ்த்து சொன்னார். இந்த நிலையில் தற்போது உதயநிதி - தயாநிதி இருவரும் கட்டிப்பிடித்து தங்கள் அன்பை வெளிப்படுத்தி உள்ளனர். இரண்டு குடும்பங்களுக்கு இடையிலான கசப்பை போக்கை இது கண்டிப்பாக உதவும். பல நாளாக நிலவி வந்த அந்த உரசல் இன்றைய நாளுக்கு பின் மறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications