கொரோனாவுக்கு 1,2,3 தெரியாததற்கு நான் என்ன செய்ய முடியும்னு முதல்வர் கேட்டாலும் கேட்பார்- உதயநிதி
சென்னை: பத்தே நாளில் கொரோனா குறையும் என்றார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் இன்றோடு 10 நாட்கள் முடிந்துவிட்டது என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,99,749 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று இரண்டாவது நாளாக கொரோனா பாதிப்பு ஒரே நாளில் 6 ஆயிரத்தை தாண்டியது. நேற்று புதிதாக 6,785 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 3,320 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 15-ஆம் தேதி சேலத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்னும் 10 நாட்களில் கொரோனா போய்விடும் என்றார்.

கொரோனா
அது போல் கடந்த மாதம் தலைமை செயலகத்தில் பேசிய முதல்வர், இன்னும் 3 நாட்களில் கொரோனா ஜீரோவாகிவிடும் என கூறியிருந்தார். ஆனால் அதன் பின்னர் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருந்தது. 3 நாட்களில் குறையும், 10 நாட்களில் குறையும் என தமிழக அரசு கூறி வருவதை எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

ஜீரோக்கள்
அதன் படி இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் பத்தேநாளில் கொரோனா குறையும் என @CMOTamilNadu கிளப்பிவிட்டு இன்றோடு 10 நாட்களாகிவிட்டன. ஏற்கனவே, 3 நாட்களில் கொரோனா ஜீரோ வரும் என்றார். பாதிப்பு எண்ணிக்கையில் ஜீரோக்கள் கூடியதே மிச்சம். கொரோனாவுக்கு ஒன்றிரண்டு தெரியாததற்கு நான் என்ன செய்ய முடியும் என்று ஒருநாள் சொன்னாலும் சொல்வார் என்றார் உதயநிதி.

டெங்கு
அது போல் இன்னொரு ட்வீட் ஒன்றையும் உதயநிதி போட்டுள்ளார். அந்த ட்வீட்டில் நங்கநல்லூரில் காய்ச்சலால் மரணமடைந்த சிறுமிக்கு கொரோனா நெகட்டிவ் என்றாலும் டெங்கு பாசிட்டிவ் எனப் பரிசோதனை முடிவுகள் வந்ததாகச் செய்தி வெளியாகியுள்ளது. கொரோனாவோடு டெங்குவும் சேர்ந்து பரவ ஆரம்பித்தால் நிலைமை இன்னும் மோசமாகும். அபாயத்தை உணர்ந்து செயல்படுங்கள் @CMOTamilNadu அவர்களே! என உதயநிதி தெரிவித்துள்ளார்.
Recommended Video

தட்டுப்பாடு
கொரோனாவுடன் டெங்கு சீசனும் சேர்ந்துவிட்டதால் காய்ச்சல் டெங்குவுக்கானதா, இல்லை கொரோனாவுக்கானதா என்ற குழப்பம் ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருந்தார்கள். அது போல் மருத்துவமனைகளில் படுக்கைக்கு தட்டுப்பாடு நிலவும் நிலையில் டெங்கு நோயாளிகளை எங்கே தங்க வைப்பது என்பது குறித்தும் அவர்கள் கவலை தெரிவித்தார்கள்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications