"கன்பார்ம்டு".. மாணவி மரணத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது உறுதி".. அழுத்தமாக சொன்ன உதயநிதி
சின்னசேலம் மாணவி விவகாரம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்
சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது உறுதி என்று திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சின்னசேலம் மாணவி உயிரிழப்பு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும் உறவினர்களும் தெரிவித்துள்ளனர். மாணவியின் மரணத்துக்கு நியாயம் கேட்டு தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

144 உத்தரவு
சாலை மறியல் போன்ற போராட்டங்களிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.. இதனிடையே மாணவியின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும் வந்துள்ளது.. இது தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்தில் வர உள்ளது.. நேற்றைய கலவரத்தையடுத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு, கள்ளக்குறிச்சி தாலுகா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார். மேலும், சின்னசேலம், நயினார்பாளையம் பகுதியிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காயத்ரி கேள்வி
மாணவியின் உயிரிழப்பு விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது.. தமிழக பாஜக தலைவர்கள், இது தொடர்பாக ஆளும் அரசை தொடர்ந்து கண்டித்தும், விமர்சித்தும் வருகின்றனர்.. அந்த வகையில், நேற்றைய தினம், பள்ளி மாணவி உயிரிழப்பு விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் மௌனமாக இருப்பது ஏன்? என்று பாஜக வெளிநாடுவாழ் தமிழர் நலன் பிரிவு மாநில தலைவர் காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியிருந்தார்..

தண்டனை உறுதி
இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாணவியின் மரணத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளதுடன், அது தொடர்பாக ஒரு ட்வீட்டையும் பதிவிட்டுள்ளார்.. அந்த ட்வீட்டில், "கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மரணம் மிகுந்த வேதனையளிக்கிறது.. பள்ளி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு, வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது உறுதி.. மாணவிகளுக்கு பாதுகாப்பான பள்ளிச்சூழலை அமைத்து தருவது அனைவரின் பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்படுவோம்." என்று குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video

அனிதா - திமுக
உதயநிதியின் இந்த ட்வீட்டுக்கு, வழக்கம்போல் பாஜகவினர் எதிர்வினையாற்றி வருகின்றனர்.. மாணவி உயிரிழந்து 5 நாட்கள் ஆன நிலையில், இந்த மரணச் சம்பவம் பெரும் கலவரமாக ஏற்பட்டுள்ள நிலையில், இந்த நேரத்தில் வந்து உதயநிதி கருத்து சொல்லி உள்ளார் என்று கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். 5 நாட்களாக எங்கே போனீங்க உதயநிதி? அனிதா மட்டும்தான் திமுகவுக்கு ஞாபகம் இருக்கா? என்றும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
-
சனாதனம் இருக்கக்கூடாதுனா பெற்றோரை துரத்திவிட வேண்டும்.. முடியுமா? உதயநிதியை தாக்குகிறாரா அர்ஜுன்? -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications