காங்கிரஸ் திமுக கூட்டணியை விட்டு விலகுதா? யூகங்களுக்கு உதயநிதி ஸ்டாலின் கொடுத்த பதிலடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "நான் நிகழ்ச்சிக்கு வரும் போது, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அவசர அழைப்பால் வெளியே சென்றுவிட்டார். அவர் கடைசி வரை வர மாட்டார் போல என நினைத்துவிட்டோம். நிகழ்ச்சிக்கு.. கூட்டணிக்கு அல்ல. காங்கிரஸ் திமுக கூட்டணியை விட்டு போகாது " என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

2026 சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கூட்டணி தொடர்பாக பல்வேறு யூகங்கள் நிலவி வருகின்றன. காங்கிரஸ் கட்சி, தவெக உடன் கூட்டணியில் சேரப்போவதாகவும் யூகங்கள் கிளம்பி வருகின்றன. இந்நிலையில், இந்த யூகங்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், செல்வப்பெருந்தகையை மேடையில் வைத்துக்கொண்டே பதில் அளித்துள்ளார்.

Udhayanidhi stalin dmk congress

சென்னை தியாகராய நகரில் இன்று செந்தில் வேல் எழுதிய திராவிடம் 2.0 ஏன்? எதற்கு? நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு இந்த நூலை வெளியிட்டு உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "நீதிக்கட்சி தொடங்கப்பட்ட நாளில் இந்த விழா நடைபெறுவது கூடுதல் சிறப்பு. நிகழ்ச்சி அழைப்பிதழில் என்னுடைய பெயரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெயரும், காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பெயரும் போடப்பட்டிருந்தது. ஆனால் இங்கு நானும், அன்பில் மகேஷும் நிகழ்ச்சிக்கு வரும்போது செல்வப்பெருந்தகை கிளம்பிவிட்டார்.

நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே வந்து, அவசர அழைப்பு காரணமாக மீண்டும் வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றார். நிகழ்ச்சி தொடங்கி அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர். கடைசி வரை இவர் வரமாட்டார் போல என்று நினைத்துவிட்டோம், நிகழ்ச்சிக்கு, கூட்டணிக்கு அல்ல. இவர் வருவாரா மாட்டாரா.. பத்திரிகை நண்பர்கள் எல்லாம் உதயநிதி அப்செட்.. செல்வப்பெருந்தகை ஆப்சென்ட்.. என தலைப்பு எல்லாம் ரெடியாக வைத்திருந்தனர். கடைசியில் அவர் சரியான நேரத்தில் வந்து அதற்கும் வழி இல்லாமல் செய்துவிட்டார்.

திமுக எனும் இரும்புக்கோட்டை கூட்டணியில் ஒரு சிறு விரிசல் ஏற்பட்டு விடாதா என்று சங்கிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் திமுக கூட்டணியை விட்டு போகாது. பாஜகவை எதிர்கொள்ள இந்தியாவிற்கே முதல்வர் ஸ்டாலின் தான் முன்னோடி. தேர்தல் சமயத்தில் தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் மோடி, கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது 8 முறை தமிழ்நாட்டிற்கு வந்து சென்றார். இருப்பினும் தமிழ்நாடு மக்கள் கொடுத்தது ஒரே ஒரு முட்டை.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கு மட்டும் வழிகாட்டியாக இல்லை, பாஜகவை எப்படி எதிர்கொள்வது என்று இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் எடுத்துக்காட்டாக உள்ளார். திராவிட மாடல் திட்டங்கள் இந்தியாவிற்கு முன்மாதிரியாக உள்ளது. தேர்தல் ஆணையம் சுதந்திரமான ஒரு அமைப்பாக இருந்தது. இன்று அது பாஜகவின் கைப்பாவையாக உள்ளது.

நாடே பேராபத்தில் சிக்கி தவித்துக் கொண்டுள்ளது. குறிப்பாக சிறுபான்மையினர், பெண்களின் வாக்குகளை நீக்க முயற்சி செய்து வருகின்றனர். எதிர்க்கட்சியான அதிமுக இதனை ஆதரிக்கிறது. பாஜகவுக்கு நாடு முழுவதும் பல மாநிலங்களில் அடிமைகள் இருக்கலாம், ஆனால் நம்ம ஊரில் இருப்பது போல், அதிமுக போல் கடைந்து எடுத்த அடிமைகள் அவர்களுக்கு எந்த மாநிலத்திலும் சிக்க மாட்டார்கள். பாஜகவின் நம்பர் 1 அடிமைகள் நாங்கள் தான் என்று நிரூபிக்க வழக்கு தொடர்ந்துள்ளார்கள்.

ஒருபுறம் தமிழ் மீது அக்கறை உள்ளது என்று கூறும் பிரதமர் இன்னொருபுறம் தமிழ் படிக்கக் கூடாது என்பதற்காக இந்தி மற்றும் சமஸ்கிருத மொழித் திணிப்பில் ஈடுபட்டுள்ளார். மும்மொழி கொள்கையை ஏற்று கொண்டால் மட்டுமே தமிழகத்திற்கு 2500 கோடி ரூபாய் என்று சொல்வது எந்த வகையில் நியாயம்? தமிழ் வளர்ச்சிக்காக கடந்த 10 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள் மோடி?

கடந்த 10 ஆண்டுகளில் 150 கோடி தமிழ் வளர்ச்சிக்கு மத்திய அரசு வழங்கி உள்ளது. ஆனால் 2400 கோடி ரூபாய் சமஸ்கிருத மொழிக்கு வழங்கி உள்ளது. இது தான் மோடியின் தமிழ் பாச நாடகம். இந்த அநியாயத்தை நாம் தட்டிக் கேட்க வேண்டும், தடுத்தாக வேண்டும். இதற்கு நம் கையில் கிடைத்திடக் கூடிய வாய்ப்பு தான் 2026 சட்டமன்ற தேர்தல்.

தேர்தலுக்கு இன்னும் முழுமையாக நான்கு மாதங்கள் கூட இல்லை. பாசிஸ்டுகளுக்கு எதிராக ஒவ்வொரு ஊரிலும், கிராமத்திலும், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கழக உடன்பிறப்புகள் போராடுவார்கள். இந்த ஜனநாயகப் போரில் நம்முடைய கொள்கைப்படை நிச்சயமாக வென்று காட்டும். தமிழகத்தில் குறைந்தது 200 சட்டமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இரண்டாவது முறையாக ஆட்சி அமைப்பார்" எனப் பேசியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+