மோடியை பார்த்து கும்பிடு போட.. நான் ஒன்னும் பழனிசாமி இல்லை.. பொங்கிய உதயநிதி.. பரபர பேச்சு!
சென்னை: பிரதமர் மோடியை பார்த்து கும்பிடு போட நான் ஒன்னும் பழனிசாமி இல்லை.. நான் கலைஞரின் பேரன் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
சட்டசபை தேர்தல் நடக்க இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. நேற்று பிரதமர் மோடி தமிழகம் வந்து பிரச்சாரம் செய்த நிலையில் தேர்தல் களத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டு உள்ளது.
திமுகவை நேரடியாக தாக்கும் வகையில் நேற்று பிரதமர் மோடி பிரச்சாரத்தில் பேசினார். இந்த நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில் தற்போது உதயநிதி ஸ்டாலினும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

தமிழகம்
நேற்று தமிழகம் வந்து இருந்த பிரதமர் மோடி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குறித்து விமர்சனம் செய்து இருந்தார். தாராபுரத்தில் பேசிய மோடி, திமுக பட்டத்து இளவரசருக்காக அக்கட்சியில் முக்கிய தலைவர்கள் ஓரம் கட்டப்பட்டுள்ளனர். திமுக இளவரசர் உதயநிதி, மூத்த தலைவர்களை ஓரம்கட்டிவிட்டி நடுநாயகமாக இருக்கிறார்கள்.

உதயநிதி
உதயநிதிக்காக கட்சியில் இருக்கும் மூத்த தலைவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. உதயநிதி, திண்டுக்கல் லியோனி ஆகியோர் பெண்களை இழிவாக பேசுகின்றனர். திமுக,காங்கிரசுக்கு குடும்பம் தான் முக்கியம். அவர்களுக்கு வாரிசு அரசியல்தான் முக்கியம். குடும்பத்தை முன்னேற்றுவதுதான் இவர்களின் நோக்கம், என்று பிரதமர் மோடி உதயநிதியை விமர்சித்து பேசினார்.

பதிலடியை
இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவிநாசி தொகுதியில் நேற்று உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அதில், மோடி என் மீது செம கோபத்தில் இருக்கிறார். நான் குறுக்கு வழியில் வந்தவன் என்று கூறுகிறார். நானா குறுக்கு வழியில் வந்தவன். திரு மோடி அவர்களே உங்களை பார்த்து நான் பயப்பட மாட்டேன்.

பழனிச்சாமி
உங்களை பார்த்து பயப்பட, கும்பிடு போட நான் ஒன்னும் எடப்பாடி பழனிச்சாமி இல்லை. நான் உதயநிதி ஸ்டாலின். நான் கலைஞரின் பேரன். உங்களை பார்த்து நான் பயப்பட மாட்டேன். நான் குறுக்கு வழியில் வந்தேனா? குஜராத் முதல்வராக இருந்து குறுக்கு வழியில் பிரதமர் ஆனது யார்? மோடி யாரை எல்லாம் ஓரம்கட்டினார் என்று லிஸ்ட் போடவா?

லிஸ்ட்
பாஜகவில் அத்வானி என்று ஒருத்தர் இருந்தார். ரதயாத்திரை எல்லாம் சென்றார். அத்வானி இப்போது எங்கே போனார்.. யஷ்வந்த் சின்காவை டார்ச்சர் செய்து அனுப்பிவிட்டார். வெங்கய்யா நாயுடு எங்கே போனார். இவர்களை எல்லாம் நீங்கள்தான் ஓரம்கட்டியது .நான் மக்கள் மத்தியில் போய் பிரச்சாரம் செய்கிறேன்.

மக்கள்
மக்களோடு மக்களாக நின்று பிரச்சாரம் செய்கிறேன். தினமும் வீடு வீடாக சென்று மக்களை சந்திக்கிறேன். உங்களுக்கு தைரியம் இருந்தால் தமிழ்நாட்டு மக்கள் வந்து சந்திங்க பார்க்கலாம். உங்களுக்கு தைரியம் இருந்தா நேரடியாக மக்கள் எதிர்கொள்ளுங்கள் பார்க்கலாம் என்று உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications