“இதுக்கு ரிவார்டு கிடைச்சிருக்கணும்.. ஆனா தண்டனை”.. பொங்கிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!
சென்னை: "மக்கள்தொகையை சிறப்பாக கட்டுப்படுத்திய சாதனைக்கு வெகுமதி பெறுவதற்குப் பதிலாக, தற்போது அரசியல் பிரதிநிதித்துவத்தை இழக்கும் அபாயத்தில் உள்ளோம்." என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
2026 ஆம் ஆண்டுக்குப் பின் மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்ய மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. இப்படி செய்தால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகள் குறையும் ஆபத்துள்ளது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

அதோடு அனைத்து கட்சிகளையும் கூட்டி ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி, தொகுதி மறுசீரமைப்பிற்கு ஒன்றிணைந்து குரல் எழுப்பச் செய்துள்ளார். மேலும் இந்தப் பிரச்சனையினால் பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களிலுள்ள கட்சிகளின் முக்கியப் பிரதிநிதிகளைக் கொண்டு "கூட்டு நடவடிக்கைக் குழு" அமைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்துள்ளார்.
கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்கும்படி 7 மாநில முதலமைச்சர்கள், முன்னாள் முதலமைச்சர்கள், அம்மாநில தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில் சென்னையில் இன்று தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது.
இந்தக் கூட்டத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், கர்நாடக துணை முதலமைச்சர் சிவகுமார், தெலுங்கானா இராஸ்டிர சமிதி கட்சி தலைவர் கே.டி.ராமராவ், சஞ்சய் குமார் தாஸ் பர்மா (பிஜு ஜனதா தளம், முன்னாள் அமைச்சர் ஒடிசா), பல்விந்தர் சிங் பூந்தர் (சிரோமணி அகாலிதளம், பஞ்சாப்) உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்று வரும் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "பல தசாப்தங்களாக, இங்குள்ள மாநிலங்கள் மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும் நிர்வகிக்கவும் குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் நாங்கள் கொள்கைகளை அறிமுகப்படுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். அதன் மூலம் நிலையான மக்கள்தொகை வளர்ச்சியை அடைந்தோம்.
வேறு சில மாநிலங்கள் விரைவான மக்கள்தொகை வளர்ச்சியை தொடர்ந்து அனுபவித்தாலும், தமிழ்நாடு பொறுப்புடன் செயல்பட்டது. இதன் விளைவாக, பல மாநிலங்களை விட மிக முன்னதாகவே மக்கள்தொகை மாற்று விகிதத்தை அடைந்தோம்.
ஆனால் இந்த சாதனைக்கு வெகுமதி பெறுவதற்குப் பதிலாக, தற்போது அரசியல் பிரதிநிதித்துவத்தை இழக்கும் அபாயத்தில் உள்ளோம்.
தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்து ஓரணியில் திரள்வது மகிழ்ச்சி. தென்னிந்தியாவின் தொகுதிகள் 20 முதல் 30 சதவீதம் வரை குறைய வாய்ப்பு. மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையக் கூடாது" என உரையாற்றியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
-
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
சனாதனம் இருக்கக்கூடாதுனா பெற்றோரை துரத்திவிட வேண்டும்.. முடியுமா? உதயநிதியை தாக்குகிறாரா அர்ஜுன்? -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
உதயநிதி முதல்வர்! எடப்பாடி துணை முதல்வர்! எப்படியிருக்கு பாருங்க! அணுகுண்டை போட்ட ஆதவ் அர்ஜுனா -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications